பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களில் ரைசாவும் ஒருவர். மாடலிங் துறையில் இரண்டாம் கட்ட மாடலாக வலம் வந்த ரைசா, தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தில் சிறு வேடம் ஒன்றில் தோன்றிருந்தாலும், பிக் பாஸ் தான் அவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில், ஓவியா, ஜூலி என்று பலர் அவ்வபோது சர்ச்சையை ஏற்படுத்தினாலும், ரொம்ப சைலண்டாக இருந்தவர் ரைசா. தான் உண்டு, தனது வேலை உண்டு, என்று பிக் பாஸ் வீட்டில் தங்கிவிட்டுச் சென்ற ரைசாவுக்கு திரைப்படம் ஒன்றில் நாயகியாக நடிக்க வாய்ப்பு வர அவரும் அதை சட்டென்று பிடித்துக்கொண்டிருக்கிறார்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘பியார் பிரேமா காதல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. விறுவிறுப்பான படப்பிடிப்பில் இருக்கும் இப்படத்தின் பாடல் ஒன்று, சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், தனது காதல் தோல்வி குறித்து மனம் திறந்து பேசியுள்ள ரைசா, அதை நினைத்து கண் கலங்கிக் கொண்டிருக்கிறாராம்.
சமீபத்தில் ரைசா அளித்த பேட்டி ஒன்றில், தனது முதல் காதல் குறித்து பேசியுள்ளார். அதில், “கல்லூரியில் படிக்கும் போது ஒரு காதல் வந்தது. சினிமாவுக்கு எல்லாம் சென்றோம். ஆனால் அந்த காதல் கடைசியில் வெற்றி பெறவில்லை, பிரிந்துவிட்டோம்.” என்று தெரிவித்துள்ளார்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...