சின்னத்திரையில் இருந்து வந்த பலர் வெள்ளித்திரையில் ஹீரோவாக வெற்றி பெற்று வருகிறார்கள். அந்த வரிசையில் எண்ட்ரியாகியிருப்பவர் தான் ராஜ்கமல். சீரியல்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர் என்று சின்னத்திரையில் பிரபல முகமாக வலம் வந்த ராஜ்கமல், ஹீரோவாக நடித்திருக்கும் ‘மேல்நாட்டு மருமகன்’ படம் நாளை (பிப்.16) வெளியாக உள்ளது. இப்படத்தை தொடர்ந்து ராஜ்கமல் நடித்த ‘சண்டிக்குதிரை’ படம் ஏற்கனவே வெளியாகிவிட்ட நிலையில், மேலும் இரண்டு படங்களில் அவர் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், சினிமாவில் ஹீரோவாக நடித்து வரும் ராஜ்கமல், ஹீரோவாக மட்டும் அல்லாமல், குணச்சித்திர வேடம், வில்லன் என்று எந்த வேடமாக இருந்தாலும் நடிக்க தயாராக இருப்பதாக கூறியிருப்பதோடு, தயாரிப்பாளர்கள் நிர்ணயிக்கும் சம்பளமே தனக்கு போதும், என்றும் கூறியியுள்ளார்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வரும் பலர் சினிமா மற்றும் டிவி சீரியல் என்று இரண்டிலும் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ராஜ்கமலோ இனி சின்னத்திரை பக்கம் போகமால் முழுக்க முழுக்க சினிமாவில் மட்டுமே நடிக்க வேண்டும் என்பதில் மும்முரமாக உள்ளார். இருப்பினும் அவருக்கு சீரியல்களில் இருந்து பல வாய்ப்புகள் வந்தாலும், அவற்றை அன்போடு தவிர்த்து வருபவர், சினிமாவில் எந்த வேடமாக இருந்தாலும் நடிக்க ரெடியாக இருக்கிறார். காரணம், சினிமாவுக்காக சென்னை வந்த ராஜ்கமல், வாழ்க்கையை ஓட்டுவதற்காக ஆரம்பத்தில் டிவி சீரியல்களில் நடித்துக்கொண்டே, சினிமாவில் வாய்ப்பு தேடியிருக்கிறார். ‘மேல்நாட்டு மருமகன்’ படத்தின் மூலம் ஹீரோ வாய்ப்பு கிடைக்க, அதன் மூலம் இன்னும் சில படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அதே சமயம், சில படங்களில் குணச்சித்திர வேடங்களுக்கு ராஜ்கமலை சிலர் பரிந்துரைத்தாலும், அவர் ஹீரோவாக நான்கு படங்களில் நடித்திருப்பதால், குணச்சித்திர வேடங்களில் நடிக்க மாட்டார், என்று கருதி அவரை அனுகாமலேயே விட்டுள்ளனர். அதேபோல், ராஜ்கமல் குறைந்தது ரூ.5 லட்சமாவது சம்பளமாக கேட்பார், என்று சிலர் கருதி அவரை அணுகாமலும் இருக்கிறார்களாம். இதுபோல ராஜ்கமலுக்கு பல படங்களின் வாய்ப்பு பறிபோயுள்ளது.
இது குறித்து மனம் திறந்த ராஜ்கமல், “பணத்திற்காக மட்டுமே நடிப்பதற்காக நான் வரவில்லை, சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது தான் எனது நீண்ட நாள் கனவு. அதற்காக நான் கடந்த இரண்டரை ஆண்டுகளாக சின்னத்திரையில் வந்த பல வாய்ப்புகளை நிராகரித்துவிட்டு சினிமாவில் வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கிறேன். ஹீரோவாக மட்டுமே நடிக்க வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு இல்லை. ஹீரோவின் நண்பர் வேடமாகட்டும், ஹீரோயினின் அண்ணன், வில்லன் உள்ளிட்ட எந்த வேடத்திலும் நான் நடிக்க ரெடியாகவே இருக்கிறேன். நான் ஜெய்சங்கர் சார் வீட்டு பிள்ளை. ஜெய்சங்கர் சாரின் ரசிகர் மன்ற தலைவரின் மகன் நான். அவருடன் 5 ஆண்டுகள் இருக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது அவர் என்னிடம் ஒன்று சொல்வார், நடிகனாகிவிட்டால் இயக்குநருக்கு மகனாகவும், தயாரிப்பாளருக்கு வாரிசாகவும் இருக்க வேண்டும், என்பார்.
அதாவது ஒரு அப்பாவால் செய்ய முடியாததை தனது மகனை செய்ய வைத்து அழகு பார்ப்பார். இயக்குநர்களும் அதுபோல தான், தாங்கள் செய்ய நினைத்ததை ஹீரோக்கள் மூலம் செய்வார்கள். வாரிசு என்றால் தயாரிப்பாளர்களை நஷ்ட்டம் அடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்கள் சம்பளமாக எதை நிர்ணயிக்கிறார்களோ அதை மட்டுமே பெற்றுக்கொண்டு நடிக்க வேண்டும், என்பார். அவரது அறிவுரைப்படி தான் நான் செயல்பட்டு வருகிறேன்.
திரும்பவும் சொல்கிறேன், சினிமாவில் இருக்க வேண்டும், தொடர்ந்து நடித்துக்கொண்டிருக்க வேண்டும், எனக்கு தயாரிப்பாளர்கள் என்ன சம்பளம் கொடுக்க நினைக்கிறர்களோ அது போதும், அதேபோல் எந்த வேடமாக இருந்தாலும் நான் நடிக்க தயாராக இருக்கிறேன்.” என்று கூறினார்.
தற்போதும் பல இயக்குநர்களிடம் வாய்ப்புகளை கேட்டு வரும் ராஜ்கமல், அவர்களுக்கு தன்னால் தொந்தரவு ஏற்படும் என்பது தனக்கு தெரியும், இருந்தாலும் சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல், வாய்ப்புகளை பெற எனக்கு இதை விட்டால் வேறு வழி இல்லை, என்று கூறியதோடு, அவர்களிடம் இந்த தருணத்தில் மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன், என்று தன்னடக்கத்துடன் பேசினார்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...