தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு நிகரான மரியாதையுடன் காமெடி நடிகர்களும் அவ்வபோது வலம் வந்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஹீரோவுக்காக படம் ஓருவது போல, நகைச்சுவைக்காகவும் பல படங்கள் வெற்றி பெற்றுள்ளது. அதுவும், தற்போதைய தமிழ் சினிமாவில் காமெடி படங்கள் தான் லாபம் பார்ப்பதால், ஹீரோக்கள் கூட காமெடி வேடங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
அந்த வகையில், தற்போது பல புதுமுக காமெடியன்கள் கோடம்பாக்கத்தில் கொடிகட்டி பறக்கின்றனர். அவர்களின் ஒருவர் தான் யோகி பாபு. குறுகிய காலத்தில் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்திக் கொண்ட யோகி பாபுவின் மவுசு அதிகரித்துள்ளது. அவரை ஒரு காட்சியிலாவது நடிக்க வைத்துவிட வேண்டும் என்று பல இயக்குநர்கள்கள் விரும்புகிறார்களாம்.
கவுண்டமணி - செந்தில், வடிவேலு, சீசனுக்கு ஏற்றவாறு வரும் விவேக் ஆகியோருக்கு பிறகு சந்தானம் தனது காமெடியால் தமிழ் சினிமாவை ஆண்டுக் கொண்டிருக்க பிறகு ஹீரோவாக நடிக்க சென்றுவிட்டார். அந்த கேப்பில் சூரி தனது ஏரியாவை விரிவுப்படுத்தியதோடு மட்டும் இல்லாமல், காமெடியனாகவே நடித்தால் போதும், என்று இருந்தார். ஆனால், அவரது இடத்தை கொஞ்சம் கொஞ்சமாக அபகரித்துக்கொண்ட யோகி பாபு தற்போது, அவரை முழுமையாக ஓரம் கட்டிவிட்டார்.
தற்போதைய சூழலில் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் காமெடி நடிகர்கள் என்றால் அது யோகி பாபு தான். சூரி ஒரு நாளைக்கு ரூ.2 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்க யோகி பாபு ஒரு நாளைக்கு ரூ.2 லட்சம் முதல் 3 லட்சம் வரை வாங்குகிறாராம். அவர் கேட்ட தொகையை கொடுக்க பலர் தயாராக இருந்தாலும், சில நேரங்களில் தேதி இல்லை என்று பல படங்களில் நடிக்க மறுப்பு தெரிவித்து வரும் யோகி பாபு, திரையில் தோன்றினாலே ரசிகர்கல் சிரிப்பதால், தயாரிப்பாளர்களின் முதல் சாய்ஸும் அவர் தானாம்.
ஒரு பக்கம் யோகி பாபுவுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வர, மறுபக்கம் போதிய வாய்ப்பு இல்லாமல் சூரி சிரமப்படுகிறாராம். இதனால், ஹீரோவாக நடித்து ரூட்டை சற்று மாற்றிக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கும் சூரி, அதற்காக கதை கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...