பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஓவியா எங்கு சென்றாலும், எதை செய்தாலும் அது காட்டு தீ போல வேகமாக பரவி வரும் நிலையில், அவர் லெஸ்பியனாக மாறிவிட்டார், என்ற தகவல் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து விசாரிக்கையில், ஒரு படத்தில் அவர் லெஸ்பியன் வேடத்தில் நடிக்கிறாராம். அதை தான் சில நெட்டிசன்கள் இப்படி கொளுத்தி போட்டுவிட்டார்களாம்.
’குளிர் 100’ படத்தை இயக்கிய அனிதா உதீப் தற்போது இயக்கு வரும் படம் ‘90 எம்.எல்’. இந்த படத்தில் ஓவியா தான் ஹீரோயின். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்திற்கு சிம்பு இசையமைக்கிறார்.
தற்போது ‘காஞ்சனா 3’ மற்றும் ‘களவாணி 2’ ஆகியப் படங்களில் நடிக்கும் ஓவியா, மூன்றாவதாக ‘90 எம்.எல்’ படத்திற்கு ஓகே சொல்லியிருக்கிறார். இந்த படத்தில் பஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், இந்த படத்தில் ஓவியா லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் லெஸ்பியன் கதாபாத்திரத்தை மையப்படுத்தி உருவாகும் முதல் படம் இது தான் என்பதால் படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், ஓவியா இப்படிப்பட்ட வேடத்தில் நடிப்பதும் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...