முன்னணி இயக்குநர்களே கதைக்கும், படத்தின் தலைப்புக்கும் மண்டய பிச்சிக்கொண்டிருக்க, தனது இரண்டாம் படம் வெளியாகும் முன்னரே, தனது மூன்றாவது படத்தின் தலைப்பை கார்த்திக் நரேன் அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு 100 நாட்கள் ஓடி மாபெரும் வெற்றிப் பெற்ற ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கார்த்திக் நரேன், தனது முதல் படத்தின் மூலமாக ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையும் தன் பக்கம் ஈர்த்தார். விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் ’துருவங்கள் பதினாறு’ பெற்ற வெற்றியால் பல பிரபலங்கள் அவரை பாராட்டினார்கள்.
உடனடியாக தனது இரண்டாவது படமான ‘நரகாசூரன்’ படத்தை கார்த்திக் நரேன் தொடங்கினார். இதில் அரவிந்த்சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிருஷ்ணா, ஆத்மிகா என்று பெரிய நட்சத்திரங்களுடன் களம் இறங்கிய கார்த்திக் நரேன், படத்தை முடித்துவிட்டு வெளியீட்டு பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில், தனது மூன்றாவது படத்தின் தலைப்பை அவர் நேற்று வெளியிட்டார். ’நாடக மேடை’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை இயக்குவதோடு, தனது நைட் நாஸ்டால்ஜியா பிலிமோடெய்ன்மெட்ன் நிறுவனம் மூலம் கார்த்திக் நரேன் தயாரிக்கவும் செய்கிறார்.
சுஜித் சரங் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ரோன் ஈத்தன் யோகன் இசையமைக்க, ஸ்ரீஜித் சரங் எடிட்ட்ங் செய்ய, சிவசங்கர் கலைப் பணியை கவனிக்கிறார். மணிகண்டன் தயாரிப்பு நிர்வாகம் என்று தனது முதல் பட குழுவினருடன் மூன்றாவது படத்திலும் களம் இறங்கியிருக்கும், நட்சத்திரங்கள் பற்றிய விபரங்களை விரைவில் அறிவிக்க இருப்பதாக கூறியதோடு, அந்த நட்சத்திர கூட்டணி, எதிர்பாரத யூகிக்க முடியாதபடி இருக்கும் என்று சஸ்பென்ஸும் வைத்திருக்கிறார்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...