’திருட்டு விசிடி’, ‘மதுரை மாவட்டம்’ ஆகியப் படங்களில் நடித்திருக்கும் பிரபா, இன்னும் பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஸ்ரீ கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற ‘வைபவ் 2018’ என்ற நிகழ்ச்சியில் நடிகர் பிரபா சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.
கல்லூரி மாணவிகள் மத்தியில் பேசிய பிரபா, “பெண்கள் கல்லூரி என்றதும் கொஞ்சம் பயந்து, தயக்கத்துடன் தான் இங்கே வந்தேன். ஆனால், இங்கே வந்து பார்த்ததும் உங்களை கண்டு வியந்தேன். இங்குள்ள அனைவருமே அன்பை பொழிந்தார்கள். நீங்கள் ஆண்களை விட மிகுந்த திறமைசாலிகளாக இருக்கிறீர்கள். பெண்கள் தான் இந்த நாட்டையும் வீட்டையும் தாங்குபவர்கள். நீங்கள் மிகுந்த தைரியத்துடன் இருக்க வேண்டும். எதிர்த்து போராடும் குணத்தை கற்றுக்கொள்ள வெண்டும். இது உங்களின் வாழ்வில் முக்கியமான பருவம். இப்போது படிப்பில் கவனம் செலுத்துங்கள். தாய், தந்தையை ஆசிரியரை மதியுங்கள். உங்கள் வாழ்வு இப்போது உங்களின் கடின முயற்சியில் உள்ளது. எல்லோரும் வாழ்வில் பெற்றி பெற வாழ்த்துக்கள்.” என்றார்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...