‘குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகியப் படங்களை தொடர்ந்து ராஜு முருகன் இயக்கும் மூன்றாவது படத்திற்கு ‘ஜிப்ஸி’ என்று தலைப்பு வைத்துள்ளார். ஜீவா ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கிறார்.
இப்படத்தின் தொடக்க விழா நேற்று பூஜையுடன் சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் பா.ரஞ்சித் கலந்துக் கொண்டு இயக்குநர் ராஜு முருகனை வாழ்த்தினார். மேலும், இயக்குநர்கள் வினோத், பிரம்மா, சத்யா, தயாரிப்பாளர்கள் மதன், எஸ்.ஆர்.பிரபு, ஜேம்ஸ் ஆகியோரும் நிகழ்வில் கலந்துக் கொண்டார்கள்.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்திற்கு யுகபாரதி பாடல்கள் எழுத, எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார், ரேமண்ட் டெரிக் கிராஸ்டா படத்தொகுப்பு செய்ய, பாலசந்திரா கலையை நிர்மாணிக்கிறார்.
விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ள இப்படத்தின் நாயகி பிற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...