Latest News :

இசையால் வட சென்னை மக்கள் வாழ்க்கையை பிரதிபலித்த இசையமைப்பாளர் பிரசாத் எஸ்.என்!
Saturday February-17 2018

சில படங்களின் வெற்றிக்கு அப்படங்களின் பாடல்கள் எப்படி காரணமாக அமைகின்றதோ அது போல பின்னணி இசையும் திரைக்கதைக்கான உயிரோட்டமாக அமைகின்றன. காட்சிகளில் இருக்கும் சுவாரஸ்யத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பின்னணி இசைக்கு முக்கிய பங்கு உண்டு. அந்த வகையில், நேற்று வெளியாகியுள்ள ‘வீரா’ திரைப்படத்தின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.

 

வட சென்னையை கதைக்களமாக கொண்டு வெளியாகியுள்ள ‘வீரா’ படத்திற்கு பிரசாத் எஸ்.என் பின்னணி இசையமைத்திருக்கிறார். பின்னணி இசைக்காக மட்டும் ஒரு இசையமைப்பாளரை இயக்குநர் தேர்வு செய்திருக்கிறார் என்றால், படத்திற்கு பின்னணி இசை எவ்வளவு முக்கியமானதாக இருக்கும் என்பது புறிகிறது. இயக்குநரின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் பணியாற்றியுள்ள இசையமைப்பாளர் பிரசாத் எஸ்.என், தனது பின்னணி இசை மூலம் வட சென்னை மக்களின் வாழ்க்கையை தெளிவாக பிரதிபலித்திருக்கிறார்.

 

படத்தின் விமர்சனங்களில் பின்னணி இசை குறித்தும், இசையமைப்பாளர் குறித்தும் பலர் பாராட்ட, இசையமைப்பாளர் பிரசாத் எஸ்.என், மிகவும் சந்தோஷமடைந்திருப்பவர், நம்மிடையே வீரா படத்தின் பின்னணி இசை குறித்து பகிர்ந்துக்கொண்டவர், படத்திற்கு பின்னணி இசை மிகவும் முக்கியமான ஒன்று, ஆனால் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இந்த படத்திற்கு பின்னணி இசை மிக சிறப்பாக இருக்கும். படத்தில் வரக்கூடிய நகைச்சுவை காட்சியையோ அல்லது சண்டைக் காட்சியையோ மாற்றியமைக்க கூடிய ஒன்று தான் பின்னணி இசை. உணர்ச்சி வசப்பட வைக்கும் காட்சியை கூட நகைச்சுவை காட்சியாக மாற்றியமைக்கலாம். படத்திற்கு பின்னணி இசை சரியாக அமையவில்லை என்றால் படம் முழுவதும் நன்றாக இருக்காது. இந்த படத்தில் புது முயற்சியாக ரெட்ரோ வரிசையில் இசை வருவது போன்று முயற்சி செய்துள்ளோம்.

 

ஒரு இசையமைப்பாளருக்கு முழு படத்திற்கும் அல்லது பின்னணி இசையமைப்பதும் மிக முக்கியம். படத்திற்கு பின்னணி இசை மட்டும் இசையமைக்க வாய்ப்பு கிடைத்தால், அந்த படத்திற்கு மிக முக்கியமான காரனங்கள் இருக்கும் போது கண்டிப்பாக இசையமைப்பேன். இந்த படத்தில் வட சென்னையில் வாழ கூடிய மக்களின் வாழ்க்கையை தெளிவாக பிரதிபலிக்கும் வகையில் பின்னணி இசை இருக்கும். இந்த மாதிரியான படங்களை அதிக எதிர்ப்பார்ப்பு இல்லாமல் பார்க்கும் பட்சத்தில், கண்டிப்பாக சிறப்பாக இருக்கும். படத்தின் தேவையான இடங்களில் தான் நகைச்சுவை மற்றும் சணைக்காட்சிகள் அமைந்துள்ளது. தேவையில்லாமல் திணிப்பது போன்ற காட்சிகள் எதுவும் இல்லை, படம் மிக சிறப்பாக வந்துள்ளது.

 

எனது அடுத்த படமான ‘காட்டேரி’ திரைப்படமும் முந்தைய படமான ‘யாமிருக்க பயமே’ படத்தை விட மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மீண்டும் அதே படக்குழுவுடன் இணைவது மகிழ்ச்சியாக உள்ளது. ‘யாமிருக்க பயமே’, ‘காட்டேடி’ திரைப்படத்தின் இயக்குநர் என்னுடைய முதல் விளம்பர வீடியோவில் இருந்து எனக்கு நன்றாக தெரியும். அதையும் தாண்டி நாங்கள் நல்ல நண்பர்கள். 

 

‘வீரா’ படத்தை தொடர்ந்து எனது இசையமைப்பில் அடுத்ததாக ‘காட்டேரி’ வெளியாக இருக்கிறது. மேலும் இரண்டு படங்களுக்கு இசையமைத்து வருவதோடு, சில படங்களுக்கான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு இருக்கிறேன். திரைப்படங்களுக்கு இசையமைப்பதோடு, இண்டிபெண்டண்ட் இசையிலும் அதிக ஈடுபாடு காட்டி வருகிறேன், அதற்கான திட்டங்களும் உள்ளது. தற்போது நிறைய பட வாய்ப்புகள் வருவதால், தனி இசை ஆல்பத்தில் ஈடுபடாமல் இருக்கிறேன், சரியான தருணத்தில் நிச்சயமாக ஆல்பங்களையும் வெளியிடுவேன்.” என்று கூறினார்.

Related News

2016

”பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை” - நடிகர் ஜெயம் ரவி உருக்கம்
Saturday January-11 2025

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

எல்லைகளைத் தாண்டிய சினிமா அனுபவம்! - கவனம் ஈர்க்கும் 'டாக்ஸிக்' கிளிம்ப்ஸ்
Friday January-10 2025

கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...

Recent Gallery