தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த ஹன்சிகாவுக்கு தற்போது பெரிய அளவில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. ஒன்று இரண்டு படங்களில் நடித்து வரும் அவர், வளர்ந்து வரும் நடிகர் ஒருவரை வருத்தப்பட வைத்திருக்கும் சம்பவம் நடந்துள்ளது.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் ‘காட்டேரி’ படத்தில் ஹீரோவாக வைபவ் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ஹன்சிகாவை தயாரிப்பு தரப்பு ஒப்பந்தம் செய்தது. பட வாய்ப்பு ஏதும் இன்றி இருக்கும் ஹன்சிகா, ஹீரோ யார் என்றெல்லாம் பார்க்காமல், வாய்ப்பு வந்தால் போதும், என்று ஒப்புக்கொண்டார். அக்ரிமெண்ட் போட்டு சம்பளமும் பேசி முடிந்த நிலையில், திடீரென்று ஹன்சிகா வைபவுடன் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம்.
ஹன்சிகா வைபவுக்கு ஜோடியாக நடிக்கிறார் என்று ஊடகங்களு செய்திகள் கொடுத்துவிட்ட பிறகு, இப்படி நடிக்க மறுப்பது ஏன்? என்று தயாரிப்பு தரப்பு கேட்க, வைபவுக்கு ஜோடியாக தன்னால் நடிக்க முடியாது, என்று ஹன்சிகா கூறியுள்ளார். மேலும், வைபவுக்கு ஜோடியாக நடிக்க வேண்டுமானால் சம்பள தொகையை உயர்த்த வேண்டும் என்று கூறியிருக்கிறார். தயாரிப்பு தரப்பும் அவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்க ரெடியாகி, எவ்வளவுமா...என்று கேட்க, அவர் கேட்ட தொகையால் அவர்களுக்கு தலையே சுற்றிவிட்டதாம்.
அம்புட்டெல்லாம் கொடுக்க முடியாது, நீ கிளம்புமா என்று ஹன்சிகாவை வழி அனுப்பிவிட்ட ‘காட்டேரி’ குழு தற்போது வைபவுக்கு ஜோடி தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறர்களாம்.
ஹன்சிகா தன்னுடன் நடிக்க மறுத்த விஷயம் அறிந்த வைபவ் ரொம்பவே அப்செட்டாகிவிட்டாராம். ’மேயாதா மான்’ வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவின் முக்கிய ஹீரோக்களின் பட்டியலில் இடம் பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த வைபவுக்கு ஹன்சிகாவின் இந்த ஆப்பு பெரும் வலியை கொடுத்துவிட்டதாம்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...