நடிகரும், இயக்குநருமான செல்வா, ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் ஆவார். கபாலி படத்திற்கு பிறகு தனது பெயரை ‘கபாலி’ செல்வா என்று மாற்றிக் கொண்ட அவர் தற்போது ‘12.12.1950’ என்ற தலைப்பில் படம் ஒன்றை இயக்கி நடித்து வருகிறார். இது முழுக்க முழுக்க ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்களைப் பற்றிய படமாகும். இப்படத்தின் பஸ் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரஜினி ரசிகர்களை கவர்ந்ததோடு, கோடம்பாக்கத்தையும் திரும்பி பார்க்க வைத்தது.
இதற்கிடையே அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் தங்களது ‘வாயேஜர்’ விண்கலம் விண்ணுக்கு சென்று 40 ஆண்டு காலம் நிறைவடைந்ததை கொண்டாடி வருவதை அறிந்த கபாலி செல்வா, 40 க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக சாதித்து, விண்வெளியையும் மிஞ்சும் ரசிகர் படை கொண்டுள்ள ரஜினிகாந்தின் புகழை பற்றியும், அவரது 40 ஆண்டுகால சாதனைகள் பற்றியும் நாசா விண்வெளி மையத்திற்கு மெயில் அனுப்பியுள்ளார். அந்த மெயிலின் தகவலை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ள அவர், சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் பற்றிய, அடுத்த மாதம் ரிலீசாக போகும் எனது படமான '12.12.1950' உலகத்தில் உள்ள எல்லா ரஜினி ரசிகர்களுக்கு ஒரு சமர்ப்பணமாகும். ரஜினி சாரின் பிறப்பை, அவரது பிறந்த நாளன்று மட்டும் கொண்டாடாமல், தினந்தோறும் கொண்டாடும் ரசிகர்கள் நாங்கள், என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...