இயக்குநராக இருக்கும் கவுதம் மேனன், ஒரு பக்கம் தயாரிப்பாளராகவும் சில படங்களை தயாரித்து வருகிறார். அப்படி அவர் தயாரிக்கும் படங்களில் பணியாற்றும் டெக்னீஷன்களுக்கு சம்பளம் கொடுக்காமல் டிமிக்கி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. அதே சமயம், இளம் இயக்குநர் ஒருவருக்கு பெரிய அளவில் மொட்டை போடவும் கவுதம் மேனன் முயற்சியில் இருக்கிறாராம்.
’துருவங்கள் பதினாறு’ மாபெரும் வெற்றிப் படத்தை கொடுத்தவர் கார்த்திக் நரேன். இளம் இயக்குநராக இவரது முதல் படத்தை ஒட்டு மொத்த தமிழ் திரையுலகமே பாராட்டியது. இந்த படத்தை இயக்கியதோடு, சொந்தமாகவும் கார்த்திக் நரேன் தயாரித்திருந்தார். தற்போது தனது இரண்டாவது படமான ‘நரகாசூரன்’ படத்தையும் கார்த்திக் நரேன் முடித்துவிட்டு ரிலீஸ் செய்வதற்கான பணிகளை தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில், ‘நரகாசூரன்’ படத்தில் தனக்கு சரிபாதி பங்கு வேண்டும், என்று கவுதம் மேனன் கார்த்திக் நரேனிடம் கேட்டிருக்கிறாராம். இந்த படம் தொடங்கும் போது கார்த்திக் நரேனுடன் இணைந்து படத்தை தயாரிக்க முன் வந்த கவுதம் மேனன் 5 லட்ச ரூபாய் மட்டுமே கொடுத்தாராம். பிறகு எந்த தொகையும் அவரிடம் இருந்து வரவில்லையாம். இதனால், முழு பணத்தையும் கார்த்திக் நரேனே போட்டு படத்தை முடித்துவிட்டாராம்.
ஆனால், படம் முடிந்தது வியாபாரப் பணிகள் தொடங்கிய உடன், கார்த்திக் நரேனிடம் கவுதம் மேனன் சரிபாதி பங்கு கேட்பதாக கூறப்படுகிறது. வெறும் 5 லட்ச ரூபாயை கொடுத்தவருக்கு எப்படி சரிபாதி பங்கு கொடுப்பது, என்று கார்த்திக் நரேன் யோசித்துக் கொண்டிருக்க, அவரிடம் இருந்து பணத்தை வாங்கும் முயற்சியில் கவுதம் இறங்கியிருக்கிறாராம்.
ஆக, எப்படியும் இருவருக்கும் இடையே விரைவில் பஞ்சாயத்து தொடங்க இருப்பது மட்டும் உறுதி.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...