Latest News :

பெண் கொடுமைக்கு எதிரான படம் ‘தமிழனானேன்’
Wednesday February-21 2018

தமிழனின் தவறான மனப்போக்கால் தான் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்து வருகின்றன. அதனை அன்றைய  ஆதித்தமிழன் எதிர்கொண்டால் எப்படி அணுகுவான்? அதற்குத் தீர்வு காண எப்படி நடந்து கொள்வான்? என்பதைப் பேசும் படம் தான் ’தமிழனானேன்'

 

புதியவர்கள் இணைந்து உருவாக்கும் படம் 'தமிழனானேன்'. கதை, திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதி இயக்கி நடித்திருக்கிறார் சதீஷ் ராமகிருஷ்ணன், அவருக்கு ஜோடியாக வந்தனா வரதராஜன், நடித்துள்ளார். சரவணன், பிரீத்தா, திருலோகச்சந்தர், அத்விக், ஷக்தி, ஜான் போன்ற புதுமுகங்களும் நடித்துள்ளனர். விக்னேஷ் அருள் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரகு ராமையா இசை அமைத்துள்ளார்.

 

படம் பற்றி இயக்குநர் சதீஷ் ராமகிருஷ்ணன் கூறுகையில், “இது தொலைந்து போன நம் பாரம்பரியங்களைத் தேடும் கதை. மறைந்து போன நம் வீரக் கலைகளைத் தேடும் கதை. நம் ஆதி கலைகளைத் தேடுகிற படமாக இருந்தாலும் நவீன ஹாலிவுட் தொழில் நுட்பங்கள் படத்தில் பயன் படுத்தப் பட்டுள்ளன. 

 

படம் மூன்று வித அடுக்காக இருக்கும். முதல் அடுக்கு என்பது இப்படத்தை ஒரு சாதாரண பார்வையில் பார்த்தால் ஒரு சாதாரண ஆக்‌ஷன் படம் போலத் தெரியும்.

 

இன்னொரு அடுக்கு என்பது ஒவ்வொரு காட்சியும் ஷாட்டும் விறுவிறுப்பானதாக இருக்கும். ஒரு காட்சியைத் தவற விட்டாலும் படம் புரியாது. மற்றொரு அடுக்கினை நோக்கினால் படத்தில் இருக்கும் தத்துவார்த்தக் கருத்துகள் தெரிய வரும்.

 

படத்தில் வரும் சண்டைக் காட்சிகளுக்கு யாருக்கும் டூப் போடப்படவில்லை . கயிறுகள் , பஞ்சு மூட்டைகள் பயன்படுத்தப்படவில்லை. கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வேலையும் காட்டவில்லை. எல்லாமே அசல் காட்சிகள் தான். இப்படம்  இம்மாதம்  23 ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகிறது” என்கிறார் சதீஷ் ராமகிருஷ்ணன்.

Related News

2029

”பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை” - நடிகர் ஜெயம் ரவி உருக்கம்
Saturday January-11 2025

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

எல்லைகளைத் தாண்டிய சினிமா அனுபவம்! - கவனம் ஈர்க்கும் 'டாக்ஸிக்' கிளிம்ப்ஸ்
Friday January-10 2025

கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...

Recent Gallery