‘சின்ன பூவே மெல்ல பேசு’, ‘செந்தூரப்பூவே’, ‘இணைந்த கைகள்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைக் கொடுத்த ராம்கி, சில காலமாக சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தவர், கார்த்தியின் ‘பிரியாணி’ படம் மூலம் வில்லனாக ரீ எண்ட்ரி கொடுத்தார். பிறகு ’மாசாணி’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்தவர், தற்போது தொடர்ந்து சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் ராம்கியின் நடிப்பில் வெளியான ‘இங்கிலீஷ் படம்’ என்ற படம் சுமாராக ஓடியது. இந்த நிலையில், நடிகர் ராம்கிக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த 13 ஆண்டுகளாக சொத்து வரியை ராம்கி கட்டவில்லையாம். அதன் நிலுவைத் தொகையான ரூ.1.17 லட்சம் சொத்து வரி செலுத்தாத காரணத்தால் ராம்கி வீட்டிற்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...