தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் இருந்து நயந்தாராவுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்தாலும், அவர் தற்போது தமிழில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அதேபோல், முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பதை தவிர்த்து வருபவர், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளோடு, ஹீரோக்களுடன் ஜோடி போடும் வாய்ப்பும் அவருக்கு ஏராளமாக வந்துக்கொண்டிருப்பதால், ஹீரோக்களோடு நடிக்க ரெடி, ஆனால் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன், ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க மாட்டேன், என்ற கண்டிஷன் போடுகிறாராம்.
இந்த நிலையில், விஜயின் 62 வது படத்தில் நயந்தாராவை ஹீரோயினாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதே சமயம், அஜித்தின் ‘விஸ்வாசம்’ குழுவும் நயந்தாராவை ஹீரோயினாக்க முயற்சித்த போது, நயந்தாரா அஜித்துக்கு ஓகே சொல்லிவிட்டார். அதுமட்டும் அல்ல, நயந்தாராவின் காதலர் இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் அஜித் கதை கேற்பதற்கான அப்பாயின்மெண்டையும் நயந்தாரா வாங்கிக் கொடுத்திருக்கிறாராம்.
ஏற்கனவே, விஷ்ணு வர்தன் அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவார் என்று சிலர் கூறிக்கொண்டிருக்க, இதற்கு நடுவே பிரபு தேவா ஒரு கதையை சொல்லியிருக்கிறார், என்ற தகவல் பரவிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், விக்னேஷ் சிவனும் அஜித்துக்காக கதை சொல்ல காத்துக் கொண்டிருக்கிறாராம்.
அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்கப் போவது யார்? என்ற போட்டியில் விஷ்ணு வர்தன் ஒரு பக்கம் இருந்தாலும், நயந்தாராவின் முன்னாள் காதலர் பிரபு தேவாவா அல்லது இன்னாள் காதலர் விக்னேஷ் சிவனா, என்ற போட்டி தான் தற்போது கோடம்பாக்கத்தின் பரபரப்பு செய்தியாகியுள்ளது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...