Latest News :

6 அத்தியாயம் படத்திற்கான பிரபலங்களின் விமர்சனம்!
Thursday February-22 2018

ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு முன்பாக தமிழ் திரையுலகின் கவனத்தை ஈர்த்த பல படங்கள், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று பெரிய வெற்றியடைந்துள்ளது. அந்த வகையில், நாளை (பிப்.23) வெளியாக உள்ள ‘6 அத்தியாயம்’ படம் பாரதிராஜா உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

இப்படத்தின் பிரத்யேக காட்சியை பார்த்து பாராட்டிய பிரபலங்கள் தங்களது விமர்சனத்தையும் வழங்கியுள்ளார்கள். அந்த விமர்சனங்கள் உங்களுக்காக இதோ,

 

இயக்குனர் பாரதிராஜா

 

தெளிவான சிந்தனை, சரியான திட்டமிடல் , புதிய வகை கதை சொல்லல், என தமிழ்சினிமாவை புது தளத்திற்கு அழைத்து செல்லும் இந்த 6 அத்தியாயம்.

 

இயக்குனர் ஏ.வெங்கடேஷ்

 

ரொம்பவே வித்தியாசமான முயற்சி , 6 கதைகளின் முடிவும் ஆச்சரியபடுத்துகின்றன, நிச்சயம் வெற்றி பெறும். 6 இயக்குனர்களுக்கும் வாழ்த்துக்கள்.

 

இயக்குனர் அறிவழகன்

 

இந்த படத்தில் கையாளப்பட்ட திரைக்கதை யுக்தி பார்வையாளர்களின் துடிப்பை இறுதிவரை பரபரப்பாகவே வைத்திருக்கும். அதுவே இதன் வெற்றி!

 

இயக்குனர் ரவிகுமார்

 

இந்த ஒரே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு திறமையான 6 இயக்குனர்கள் மற்றும் நிறைய இளம் டெக்னிசியன்களை அறிமுகவாவதே இதன் சிறப்பு.

 

இயக்குனர் தாமிரா

 

ஒரே படத்தில் பலவித வண்ணங்கள் பலவித சுவைகள் உங்களை சுவாரசப்படுத்தும்.

 

 

இயக்குனர் மீராகதிரவன்

 

ஆறு இயக்குனர்களின் பார்வையில் ஆறுவிதமான பேய்கள் பற்றிய அலசல் தமிழ்சினிமா கண்டிராத புதிய முயற்சி.

 

தயாரிப்பாளர் / இயக்குனர் சுரேஷ்காமாட்சி

 

தமிழ்சினிமா எப்போதுமே புதுவகை முயற்சிகளுக்கு கை கொடுக்கும் , அதன்படி இந்த 6அத்தியாயம் தமிழ்சினிமாவின் புது அத்தியாயமாக வெற்றி பெறும்.

 

இயக்குனர் கே.எஸ் .தங்கசாமி

 

ஒரு திரைப்படம் 6 திரைகதைகள் & 6 களங்கள் , 6 இயக்குனர்கள், இந்த திரைப்படம் மூலமாக நிறைய தொழில்நுட்ப கலைஞர்கள் அறிமுகம் ஆகிறார்கள் தயாரிப்பாளர் உட்பட, அனைவரும் திரைத்துறையில் சாதிக்க 6 அத்தியாயம் பாலமாக அமையும். நெஞ்சார்ந்த வாழ்த்துகள்...

 

நடிகை அதுல்யாரவி

 

ரொம்ப வித்தியாசமான முயற்சி, 6 விதமான கதைகள், யூகிக்க முடியாத கிளைமேக்ஸ் என இறுதிவரை பரபரப்பாக கொண்டுசென்றுள்ளனர் , நிச்சயம் வெற்றிபெறும்.

 

நடிகர் ராமதாஸ்

 

ஆறு புள்ளிகளை கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு அழகிய கோலம் இந்த 6 அத்தியாயம்.

 

நடிகர் வின்செண்ட் அசோகன்

 

சிரிப்பு , ஆச்சரியம் , காதல் , பயம் , அமானுஷ்யம் , மிரட்சி  என அனைத்துமே ஒரே படத்தில் , எதிர்ப்பார்ப்பில்லாமல் சென்ற எனக்கு வியப்பில் ஆழ்த்தியது இந்த 6 அத்தியாயம்.

 

மனுஷ்யபுத்திரன்

 

குறும்படங்களுக்கும், திரைப்படங்களுக்கும் இடையில் ஒரு பாலமாக இருப்பதே இது போன்ற படங்களும் அதன் கருத்தாக்கமுமே.

 

மின்னம்பலம்

 

மிகக் குறைவான செலவில் (ஓரிரு லட்சங்கள்) ஒவ்வொரு படமும் எடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை அறியும்போது ஆச்சர்யமாக உள்ளது. இவ்வளவு சிக்கனமாக எடுக்கப்பட்ட படமும் திரைப்படம் பார்க்கும் அனுபவத்தைத் தர முடியும், பார்வையாளர்களின் ஆவலைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்னும்போது கோடிகள் கொட்டப்பட்டு உருவாகி விரைவில் திரையரங்குகளிலிருந்து விடைபெற்றுச் செல்லும் படங்கள் தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வருகின்றன. பார்வையாளர்களைக் கவர அளவு முக்கியமில்லை என்பதை ‘6 அத்தியாயம்’ உணர்த்துகிறது.

 

அம்புலி ஹரிஸ்நாரயானன்

 

6 அத்தியாயம் படத்தின் ப்ரிவியூ ஷோ பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது... எதிர்பார்ப்புக்கு குறைவில்லாமல் ஆறு கதைகளும்... ஃப்ரெஷ்ஷாக இருந்தது... ஆறும் ஹாரர்தான்.. ஆனால், ஆறும் வேறு வேறு வகை ஹாரர்... அதுதான் இந்த படத்தின் பலம்.. மேலும், ஆறு கதைகளின் க்ளைமேக்சை முடிவாய் கோர்த்து ஒன்றாக சொன்ன முயற்சி நல்ல யுத்தி.

 

கூடுதல் போனசாய்... End Credits-ல் வரும் நண்பர் சாம் மற்றும் ம.கா.பா ஆனந்தின் பாடலான 'குண்டுமல்லி ஒண்ணு வச்சிவிடவா' பாடல் நல்லதொரு ஃபினிஷிங் டச்சாய் அனிமேஷன் அட்டகாசம்..

Related News

2035

”பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை” - நடிகர் ஜெயம் ரவி உருக்கம்
Saturday January-11 2025

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

எல்லைகளைத் தாண்டிய சினிமா அனுபவம்! - கவனம் ஈர்க்கும் 'டாக்ஸிக்' கிளிம்ப்ஸ்
Friday January-10 2025

கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...

Recent Gallery