டிவி நிகழ்ச்சியில் பிக் பாஸாக இருந்த கமல்ஹாசன், தற்போது அரசியலிலும் பிக் பாஸாக மாறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தனது அரசியல் பயணத்தை ரமேஸ்வரத்தில் இருந்து நேற்று தொடங்கியவர், நேற்று மாலை மதுரையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தினார்.
பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயரான ‘மக்கள் நீதி மய்யம்’ என்பதை வெளியிட்டு, கட்சியின் சின்னத்தையும் வெளியிட்டார். தற்போது அவரது கட்சி சின்னத்தின் மீது பல விவாதங்கள் நடந்து வந்தாலும், கமலின் கட்சியில் தங்களை இணைத்துக் கொள்ள பல திரையுல பிரபலங்கள் விருப்பம் தெரிவித்து வருகிறார்கள்.
இதற்கிடையே, கமலின் புதிய கட்சி தொடக்க விழாவில் பிக் பாஸ் புகழ் பரணியும் கலந்துக் கொண்டுள்ளார். அப்போது, அவர் கமல்ஹாசனை பார்த்ததும், அவரது காலில் விழ முயன்றுள்ளார். உடனே அங்கிருந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பரணியை தடுத்தி நிறுத்தியதோடு, தன்னுடைய ஆதாரவாளர்கள் எப்போதும் தலை நிமிர்ந்து மக்களின் நன்மைக்காக செயல்படுவதையே அவர் விரும்புவதகாக, கூற, பரணியே கமலின் காலில் விழுந்தே தீருவேன் என்று முரண்டு பிடித்துள்ளார்.
இதையடுத்து, பரணியை எச்சரித்த கமல்ஹாசன், நிகழ்ச்சி அமைப்பாளர்களின் வேண்டுகோளை ஆதரவாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும், இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...