நடிகர் கமல்ஹாசன் நேற்று தனது அரசியல் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை வெளியிட்டு மதுரையில் கூட்டத்தை நடத்திய நிலையில், அவருக்கு போட்டியாக விஜயும் தனது அரசியல் செயல்பாடுகளை மறைமுகமாக தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்ககனவே, ரஜினி, கமல் போல தனது மன்றத்தில் புதிய உறுப்பினர்களையும், நிர்வாகிகளையும் சேர்க்கும் பணிகளை விஜய் முடக்கிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கமல் நேற்று தனது அரசியல் பயணத்தை தொடங்கிய நாளில், விஜய் தனது ரசிகர்கள் மூலமாக புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளார்.
கன்னியாகுமரி விஜய் ரசிகர்கள், நடிகர் விஜய் ஆன்லைன் வெல்பேர் கிளப் (ACTOR VIJAY ONLINE WELFARE CLUB) என்ற நற்பணி இயக்கத்தின் கீழ் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குமரி மீனவ மக்கள் குடும்பத்தினருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான உனவு பொருட்களை வழங்கி உதவி செய்துள்ளார்கள்.
கமல்ஹாசன் மீனவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்தவே யோசித்து பிறகு, மீனவர்களிடம் ஏற்பட்ட சலசலப்பால் கலந்தாழ்வு நிகழ்ச்சியை நடத்தினார். ஆனால், விஜய் எந்தவித சத்தமும் இல்லாமல் தனது ரசிகர்கள் மூலமாக பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உதவி செய்து வருவதால் கமலுக்கு போட்டியாக விஜய் களத்தில் இறங்கிவிட்டார் என்றே தெரிகிறது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...