’மிருகம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான ஆதி, தொடர்ந்து ஈரம், அய்யனார், ஆடு புலி, அரவாண், வல்லினம் என ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘மரகத நாணயம்’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இந்த நிலையில், விபத்தில் ஒன்றில் தனது தம்பியை பறிகொடுத்து தவிப்பதாக நடிகர் ஆதி, தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து ஆதி தனது டிவிட்டரில், ”என் தம்பியை இழந்து தவிக்கிறேன். அவனது ஆன்மா சாந்தி அடையட்டும். அவன் இல்லாமல் என்னுடைய வாழ்க்கை முன்பு போல இருக்காது. அவனிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அவன் ஹெல்மட் அணிந்திருக்கலாம்.” என்று தெரிவித்துள்ளார். நடிகை நிக்கி கல்ராணியும் தனது இரங்கலை டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்த சதீஷ் என்பவர் ஆதியின் உடன் பிறந்த தம்பி அல்ல, அவர் ஆதியின் உதவியாளர் ஆவார். பல வருடங்களாக ஆதியிடம் உதவியாளராக பணியாற்றும் இவர் ஆதியை அண்ணா என்று தான் அழைப்பார், அவரது வார்த்தைக்கு ஏற்றவாறு ஆதியும் இன்று அவரது இழப்பை எனது சகோதரனின் இழப்பாகவே நினைத்து வருந்துவது அவரது ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Love you a lot satish....Will miss you for life... Feels incomplete without you da... May you soul rest in peace! pic.twitter.com/s5Hvhf5GuK
— Aadhi's (@AadhiOfficial) February 19, 2018
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...