அரசியல், சினிமா, பொது பிரச்சினை என்று எதுவாக இருந்தாலும், யாராக இருந்தாலும் ஓபனாக விமர்சித்து வரும் நடிகை கஸ்தூரி, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவராக வலம் வருகிறார். ஆரம்பித்தில் இவரது டிவிட்டர் பக்கத்தில் ஆட்களே குறைவாக இருந்த நிலையில், இவர் போடும் கண்டனங்களுக்காகவும், விமர்சனங்களுக்காகவும் தற்போது இவரை ஏராளமானோர் பாலோ செய்ய தொடங்கியுள்ளார்கள்.
இந்த நிலையில், சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் கமல்ஹாசனையும் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் சேர்த்து கஸ்தூரி மரண கலாய் கலாய்த்தது வைரலாகியுள்ளது.
மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய கமல்ஹாசன், அதன் தொடக்க விழாவை மதுரையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டமாக நடத்தினார். அப்போது அனைவருக்கும் தரமான கல்வி, மருத்துவம், குடிநீர், மின்சாரம் போன்றவை கிடைக்க மக்கள் நீதி மய்யம் கட்சி பாடுபடும் என்றும் அவர் பேசினார்.
கமலுக்கு ஏராளமான சினிமா பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருவது போல, அவர் நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள் சிலரும் அவரது கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். இதை வைத்து தான் நடிகை கஸ்தூரி அவரை கலாய்த்துள்ளார்.
”சிநேகன், வையாபுரி, பரணி, ஸ்ரீபிரியா, விஜய் டிவி மகேந்திரன் என மொத்த பிக் பாஸ் டீம் இறங்கியிருக்கு. விவோ தான் ஸ்பான்ஸரா?” என்று கேள்வி எழுப்பிய கஸ்தூரி, “எலிமினேஷன் கூட வரும்ல” என்றும் தெரிவித்து கமலை கிண்டல் செய்திருப்பது தற்போது ஹாட்டான டாப்பிக்காக அமைந்துவிட்டது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...