‘மெர்சல்’ வெற்றியை தொடர்ந்து விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படம் விஜயின் 62 வது படமாகும். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இதற்கிடையே, விஜயின் 63 வது படத்தை இயக்கப் போகும் இயக்குநர் யார்? என்பதில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. ஆரம்பத்தில் அட்லி பெயர் அடிபட்டாலும், தற்போது அட்லியை விஜய் கழட்டிவிட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. அதனால் அட்லி நிச்சயம் விஜய் படத்தை இயக்கப் போவதில்லை என்று கூறப்பட்டுள்ள நிலையில், மோகன் ராஜா விஜயை சந்தித்து ஒரு கதை சொல்லியிருப்பதாகவும், அந்த கதை விஜய்க்கு பிடித்துவிட்டதாகவும் தகவல் வெளியானது.
இதனால், மோகன் ராஜா தான் விஜயின் 63 வது படத்தை இயக்குவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வேறு ஒரு இயக்குநரும் விஜய்க்கு கதை சொல்லி ஓகே வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
ஆம், விஜயை வைத்து ‘ஜில்லா’ என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்த நெல்சன் தான் விஜயின் 63 வது படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...