தமிழ் சினிமாவின் பிளே பாய் என்று அழைக்கப்படும் ஆர்யா, எப்போது திருமணம் செய்துக்கொள்வார் என்ற கேள்வி பலரிடம் இருந்து வந்த நிலையில், தற்போது பெண் தேடும் படலத்தை தொலைக்காட்சி ஒன்றில் தொடங்கியுள்ள ஆர்யா, அதற்காக ராஜஸ்தானில் முகாமிட்டுள்ளார்.
அனைத்து தரப்பு பின்னணியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 16 பெண்கள் ஆர்யாவை திருமணம் செய்துக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், இந்த பெண்களில் ஒருவரை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஆர்யாவை யார் கவர்வார்கள் என்பது நிகழ்ச்சியின் முடிவில் தான் தெரியும்.
இந்த நிலையில், இதில் கனடாவில் இருந்து வந்திருக்கும் சூசனா என்ற பெண்ணும் பங்கேற்றுள்ளார். இலங்கையை சேர்ந்தவரான அவர், கதிர்வீச்சு சிகிச்சை நிபுணராக உள்ளாராம்.
அந்த பெண் ஆர்யாவிடம் பேசும் போது, தான் விவாகரத்தனவர், தனக்கு ஒரு மகன் இருக்கிறான், என்ற தகவலை கூறியுள்ளார்.
இதைக் கேட்ட ஆர்யா ரொம்பவே அதிர்ச்சியடைந்துள்ளார், இனி அவர் இந்த பெண் விவகாரத்தில் எத்தகைய முடிவு எடுக்கப் போகிறார் என்பதில் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...