ரஜினி, கமல் ஆகியோர் அரசியலில் இறங்கிவிட்டதால் இனி தமிழ் சினிமாவில் அவர்கள் இடத்தையும் சேர்த்து விஜய் மற்றும் அஜித் தான் ஆட்சி புரிவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், ரஜினிகாந்த் திடீரென்று தனது புதிய படத்தின் அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளார்.
நடிப்புக்கு முழுக்குப் போடும் செய்தியை மருத்திருக்கும் கமல்ஹாசனும், அரசியல் மட்டும் அல்ல எங்கு என்றாலும் தொடர்ந்து நடித்துக் கொண்டு தான் இருப்பேன், என்றும் கூரியுள்ளார். ஆக, மொத்தத்தில் அரசியல் கை கொடுக்கவில்லை என்றால், நமது பழைய தொழிலான சினிமாவை தொடரலாம் என்று இந்த இரண்டு ஜாம்பவான்களும் முடிவு செய்திருப்பது இவர்களது அரசியல் நடவடிக்கையில் நன்றாக தெரிகிறது.
ரஜினிகாந்தின் நடிப்பில் மிக பிரம்மாண்ட படமாக உருவாகியுள்ள ‘2.0’ படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட தயாரிப்பு தரப்பு முடிவு செய்திருந்தது. ஆனால், சில காரணங்களால் ரஜினிகாந்தின் ‘காலா’ படம் முதலில் ரிலீஸ் ஆக உள்ளது. இருந்தலும், காலா வெளியான சில வாரங்களுக்குப் பிறகு 2.0 படத்தையும் வெளியிடலாம் என்று தயாரிப்பு தரப்பு திட்டமிட்டது. காரணம் கோடை விடுமுறையின் போது வெளியிட்டால் வசூலை அள்ளிவிடலாம் என்பது அவர்களது திட்டமாக இருந்தது.
இந்த நிலையில், 2.0 படத்தின் ரிலீஸ் தேதியில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, வரும் தீபாவளிக்கு அப்படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தீபாவளிக்கு அஜித்தின் ‘விஸ்வாசம்’ மற்றும் விஜயின் 62 வது படம் வெளியாக இருந்தது. இந்த நிலையில் 2.0 படத்தையும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முடிவு செய்திருப்பதால், ரஜினி படத்துடன் போட்டி போடாமல், அவருக்கு விஜயும், அஜித்தும் வழி விட்டு ஒதுங்கிவிடுவார்கள், என்று கூறப்படுகிறது. இதனல், அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...