Latest News :

உலக அளவிலான முக்கிய பிரச்சனைக்கு தீர்வு கண்டுபிடித்த நடிகர் ஆர்கே!
Saturday February-24 2018

தமிழ் சினிமாவில் வெற்றிகரமான நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அறியப்படுகின்ற ஆர்.கே-வுக்கு வெற்றிகரமான தொழிலதிபர் என்ற மற்றொரு முகமும் உண்டு.

 

கடந்த 17 வருடங்களாக தான் நடத்தி வரும் வி கேர் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பாக ’விஐபி ஹேர் கலர் ஷாம்பூ’ என்கிற புதிய தயாரிப்பை ஆர்.கே மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

 

டை அடிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களுக்கு தீர்வு காணும் விதமாகவும், அதற்கு மாற்றாக எளிமையாக பயன்படுத்தும் விதமாகவும் ஆர்.கே-வின் புதிய கண்டுபிடிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆர்.கே-வின் இந்த புதிய கண்டுபிடிப்பு அறிமுக விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இப்பொருளின் விளம்பர தூதரான பாலிவுட் நடிகர் விவேக் ஒபராய் கலந்துக் கொண்டு ‘வி கேர் விஐபி ஹேர் கலர் ஷாம்பூ’ வை அறிமுகப்படுத்தினார். இவர்களுடன் பாலிவுட் நடிகரும் விஐபி ஹேர் கலர் ஷாம்பூவின் விளம்பர மாடலும், சமீபகாலமாக ஐபிஎல் மேன் என அழைக்கப்படுபவருமான சமீர் கோச்சரும் கலந்துக்கொண்டார்.

 

இந்நிகழ்ச்சியில் அனைவரையும் வரவேற்று பேசிய வி கேர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிரபா ரெட்டி பேசும் போது, “வி கேர் என்றாலே தனித்தன்மை என உறுதியாக சொல்லலாம். எங்களது ஒவ்வொரு தயாரிப்பும் தனித்தன்மையுடன் இருந்து வருகின்றன. அதேசமயம் மக்களுக்கு பயனளிக்கக் கூடியதாகவும் இருந்து வருகின்றன. 

 

அந்தவகையில் வி கேர் நிறுவனத்தின் மைல்கல் என்று சொல்லும் விதமாக இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை அறிமுகப்படுத்துகிறோம். உடலின் எந்தப்பகுதியிலும் உள்ள நரைமுடிகளுக்கு இதை எளிதாக பயன்படுத்தமுடியும். அதனால் இனி டை என்கிற விஷயத்திற்கு வேலையே இல்லை. ஷாம்பூ மட்டும் தான்” என்றார்.

 

பாலிவுட் நடிகர் சமீர் கோச்சர் பேசுகையில், “ஆர்கே என்னை சந்தித்து இந்த தயாரிப்பு பற்றி விளக்கிய போது ஆச்சர்யமாக இருந்தது. நம்புவதற்கு கொஞ்சம் சிரமமாகவும் இருந்தது. ஆனால் இதை நானே அனுபவப்பூர்வமாக பயன்படுத்திய போது அடைந்த ஆச்சர்யத்திற்கு அளவே இல்லை. நிச்சயம் ஆர்கேவின் இந்த தயாரிப்பு உலக அளவில் வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமில்லை” என கூறினார்.

 

நடிகர் விவேக் ஓபராய் பேசும்போது, ”இன்று உலகம் முழுதும் காலை உணவாக ரசித்து சாப்பிடும் இட்லி சாம்பாராகட்டும், இன்று உலகம் முழுதும் அறியப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகட்டும், தென்னிந்தியா எப்போதுமே மிகச்சிறந்த தயாரிப்புகளைத் தந்துள்ளது. ஏன் என்னுடைய அம்மா, மனைவி எல்லோருமே தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் தான்.  

 

முடி என்பது உடலின் ஒரு பகுதி மட்டுமல்ல, அது ஒரு மனிதனின் தன்னம்பிக்கை. அதனால் தான் அவன் தன்னுடைய நரைமுடியை மறைக்க ரொம்பவே மெனக்கெடுகிறான். அந்தவகையில் நடிகர் ஆர்கே ஒரு பிசினஸ்மேனாக என்னிடம் வந்து இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை பற்றி சொன்னதும் ஆரம்பத்தில் நான் நம்ப மறுத்தேன். காரணம் அமோனியா இல்லாமல், பிபிடி இல்லாமல் ஒரு ஹேர் டை என்பது எப்படி சாத்தியமாகும்..? ஆனால் நானே அதை நம்பும் விதமாக எனது சந்தேகங்களை நிவர்த்தி செய்து, அது சாத்தியம் தான் என நிரூபித்து காட்டினார் ஆர்கே. 

 

நான் எப்போதுமே ஒரு விஷயத்தை மக்களுக்கு எந்தவிதமாக பயன்படும் என்கிற கண்ணோட்டத்தில் பார்ப்பவன். அதில் எனக்கும் ஆர்கேவுக்கும் ஒரேவிதமான சிந்தனை என்பதை அறிந்துகொண்டேன்.. இப்போது சொல்கிறேன். 

 

இந்த நிறுவனத்தின் விளம்பர தூதராக மட்டுமல்ல, இந்த நிறுவனத்தின் பங்குதாரராகவும் என்னை இணைத்துக்கொள்ளவும் ஆசைப்படுகிறேன். அந்தளவுக்கு இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூ இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுதும் உள்ள மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையப்போகிறது.” என்றார்.

 

வி கேர் நிறுவனத்தின் சேர்மனும் நடிகருமான ஆர்கே பேசுகையில், “அன்றும் இன்றும் எப்போதுமே வெள்ளையனை வெளியேற்றுவது என்பது ஒரு பிரச்சனைதான். அதேபோலத்தான் நரைமுடி என்பது மனிதர்களுக்கு ஒரு பிரச்சனையாகவே இருந்து வருகிறது. என்றும் இளமையாக ஒருவரை அடையாளப்படுத்துவது அவரது கருகரு தலை முடிதான். ஆனால் இன்றைய சூழலில் 16 வயது முதல் உள்ள இளைஞர்களுக்கு கூட நரை விழுந்துவிடுகிறது. 

 

இன்று பலரும் டை அடிப்பதற்காகப்படும் சிரமங்களையும், அதனால் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் மனதில் வைத்து இதற்கு மாற்றாக ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும் என்கிற உத்வேகத்தால் பல மாத பரிசோதனைக்குப் பின்பு உருவான தயாரிப்புதான் எங்களின் இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூ. டை அடிக்கும்போது கறை படியுமோ, அலர்ஜி ஆகுமோ என்கிற கவலை இனி இல்லை. காரணம் இதில் அந்த பாதிப்புகளை ஏற்படுத்தும் அமோனியா, பிபிடி என எதுவுமே சேர்க்கப்படவில்லை. 

 

வழக்கமான ஷாம்பூவை பயன்படுத்துவதைப் போல இதை பயன்படுத்த முடியும். சுமார் ஆறு மாத காலமாக ஒரு லட்சம் பேருக்கு இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை கொடுத்து, அவர்கள் இதை பயன்படுத்தி இதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திய பின்னரே இதை இப்போது நேரடி மார்க்கெட்டில் அறிமுகப்படுத்துகிறோம்.

 

வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்பது அரசியலில் மட்டுமல்ல, வியாபாரத்திலும் கூட அப்படித்தான். எங்களுடைய தயாரிப்புகள் தென்னிந்தியாவில் ரொம்பவே ஸ்ட்ராங்கான இடத்தை பிடித்திருக்கின்றன.

 

ஆனால் எல்லோருக்கும் பாராளுமன்றத்திற்கு செல்ல ஆசை இருப்பதுபோல, எனக்கும் எங்களது தயாரிப்புகளை இந்திய அளவில் கொண்டு செல்லவேண்டும் என்கிற ஆசை நீண்ட நாட்களாவே இருந்து வருகிறது. 

 

தற்போது இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் உள்ள பலரும் தங்களது தலைமுடி நரைப்பது என்கிற பிரச்சனையை சந்தித்து வருகிறார்கள் என்பதால் எங்களது புதிய தயாரிப்பான இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை இந்திய அளவில், மட்டுமல்லாமல் இன்டர்நேஷனல் லெவலில் எடுத்து செல்வதற்கு ஒரு மனிதர் தேவைப்பட்டார். அவர்தான் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய். காரணம் எந்த விஷயத்தையும் சமூகத்திற்கு பயன் தருமா? என்கிற கண்ணோட்டத்தில் அணுகும் நபர் அவர்.

 

இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூ பற்றி சொன்னதும் அவரும் மற்றவர்களை போல ஆரம்பத்தில் நம்பவில்லை. ஒருமுறைக்கு இருமுறையாக அவரிடம் தொடர்ந்து மணிக்கணக்கில் விவாதித்தேன்.. 

 

இதன் நம்பகத்தன்மையை அவர் உணர்ந்தபின்னர், இதை உலகெங்கிலும் கொண்டு செல்லும் தூதராக மட்டுமல்ல, இதோ இந்த நிறுவனத்தின் பங்குதாரராக தன்னை இணைத்துக்கொள்கிறேன் என இப்போது சொன்னாரே, அந்த அளவுக்கு இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூ அவரை ரொம்பவே ஈர்த்துவிட்டது. 

 

டை அடிக்கும்போது கருப்பு தோல் மீது படும்போது அப்படியே படிந்துவிடும். ஆனால் இந்த ஷாம்பூ முடிக்கு மட்டுமே கருப்பு கலரைத் தரும்.

 

கிளவுஸ் கூட இல்லாமல் சாதாரணமாக கைகளில் எடுத்து பயன்படுத்தும் ஹேர் கலர் ஷாம்பூ என்னால் கண்டுபிடிக்கப்பட்டு உருவாக்கப்பட்டு பரிசோதனைக்குப் பிறகு மக்களிடம் கொண்டு வந்திருக்கிறோம். ஒரு முக்கிய மக்களின் தேவையை நிவிர்த்தி செய்யப் பயன்படும் பொருளைக் கண்டுபிடித்ததில் உண்மையிலேயே மகிழ்ச்சி கொள்கிறேன். 

 

இதற்காக ஒரு வருடம் படத்தில் கூட நடிக்கவில்லை. இனி இதை மக்களிடம் சேர்த்துவிட்டு மிகப்பெரிய  பட்ஜெட்... மிகப் பிரம்மாண்டமான படம் ஒன்றில் நடிக்க இருக்கிறேன். அந்த படம் பலரின் கண்களை திறக்கும் படமாக இருக்கும்.. அதன் அறிவிப்பு ஓரிரு மாதங்களில் வரும். 

 

ஒரு நடிகர் .. ஒரு ஃபார்முலாவை  கண்டுபிடிப்பதும் அது தயாரிப்பாக உருமாறுவதும் இதுவே முதல்முறை என நினைக்கிறேன். அவ்விதத்தில் உண்மையாகவே பெருமைகொள்கிறேன். 

 

இந்தியாவில் உள்ள 13௦ கோடி பேரில் சுமார் 40 கோடி பேர் ஹேர் டை அடிக்கிறார்கள்.. இதில் வெறும் ஒரு கோடி பேர் எங்களது இந்த புதிய தயாரிப்பை உபயோகப்படுத்தினாலே எங்களது டர்ன் ஓவர் 5௦௦ கோடியைத் தாண்டும்.. அதை இலக்காக வைத்து நாங்கள் நகர இருக்கிறோம். ” என்றார் ஆர்கே.

 

விழாவினை விகடன்.காம் தொகுப்பாளினி தீப்தி தொகுத்து வழங்கினார்.

Related News

2053

”பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை” - நடிகர் ஜெயம் ரவி உருக்கம்
Saturday January-11 2025

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

எல்லைகளைத் தாண்டிய சினிமா அனுபவம்! - கவனம் ஈர்க்கும் 'டாக்ஸிக்' கிளிம்ப்ஸ்
Friday January-10 2025

கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...

Recent Gallery