ரஜினிகாந்தின் ’காலா’, ‘2.0’ என இரண்டு படங்கள் வெளியாக உள்ள நிலையில், அவர் அரசியல் கட்சி தொடங்குவதில் தீவிரம் காட்டி வருகிறார். விரைவில் அவரது புதிய கட்சி மற்றும் சின்னம் ஆகியவை அறிமுகமாக உள்ள நிலையில், திடீரென்று தனது புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் வெளியிட்ட போதிலும், பிற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து எந்த விபரத்தை வெளியிடவில்லை.
இதற்கிடையே, கபாலி, காலா ஆகிய படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் தான் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கும் இசையமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகின. இதையடுத்து சமூக வலைதளங்களில் இந்த தகவல் வேகமாக பரவியது.
இந்த நிலையில், கார்த்திக் சுப்புராஜ் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மானை இசையமைப்பாளராக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு தரப்பினர் சந்தோஷ் நாராயணன் என்று கூறி வந்தாலும், அது அதிகாரப்பூர்வமான தகவல் என்றே கூறப்படுகிறது.
மொத்தத்தில், ரஜினியின் புதிய படத்திற்கு இசையமைப்பது சந்தோஷ் நாராயணன் அல்லது ஏ.ஆர்.ரஹ்மான் என்பதில் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...