பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவி, இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 54.
தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரீதேவி, துபாயின் இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
நடிகை ஸ்ரீதேவி திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக நேற்று இரவு துபாய் சென்றார். இரவு 11 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சொந்த ஊராக கொண்ட ஸ்ரீதேவி, 4 வயதிலேயே நடிக்க தொடங்கினார். தமிழில் வெளியான ‘துணைவன்’ என்ற படத்தில் முருகன் வேடத்தில் நடித்தார். தொடர்ந்து பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர், பிறகு ஹீரோயினாக தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய மொழி மற்றும் இந்தி சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
தொடர்ந்து சினிமாவில் நடித்த நடிகை ஸ்ரீதேவி, இங்கிலிஸ் விங்கிலிஸ், புலி, மாம் என தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தார்.
2013 ஆம் ஆண்டில் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்ற ஸ்ரீதேவி, பிலிம்பேர் விருதுகள், மூன்றாம் பிறை படத்துக்காக தமிழக அரசின் விருது என பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.
இந்தி திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரீதேவிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
ஸ்ரீதேவின் திடீர் மரணம் இந்திய திரையுலகை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. #FlimActress #Sridevi #tamilnews
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...