Latest News :

ஸ்ரீதேவியின் நிறைவேறாத ஆசை!
Sunday February-25 2018

இந்திய சினிமாவின் முன்னணி ஹீரோயினாக திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவி, இன்று அதிகாலை துபாயில் மாரடைப்பால் மரணமடைந்தார். திருமண நிகழ்ச்சி ஒன்றுக்காக துபாய் சென்ற அவருக்கு நேற்று இரவு 11 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்ததாகவும் அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

 

ஸ்ரீதேவி இறப்பதற்கு முன்பு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், அவரது ஆசை ஒன்று நிறைவேறாமல் போனதும், அவரது குடும்பத்தாரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

நடிகை ஸ்ரீதேவி, தனது மூத்தமகள் ஜான்வி கபூரை ஹீரோயினாக்க ஆசைப்பட்டு வந்தார். அதற்காக தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் கதை கேட்டு வந்தவர், பாலிவுட்டில் தனது மகளை அறிமுகப்படுத்திவிட்டு பிறகு தமிழ் சினிமாவில் நடிக்க வைக்க முடிவு செய்திருந்தார்.

 

இதையடுத்து ஜான்வி கபூர் ‘தடக்’ என்ற இந்தி படத்தில் ஹீரோயினாக நடிக்க தொடங்கினார். தனது மகளின் முதல் படத்தை பார்க்க ஸ்ரீதேவி மிகவும் ஆவலோடு இருந்த நிலையில், அப்படம் ஜூலை மாதம் வெளியாவதாக இருந்தது. இந்த நிலையில், ஸ்ரீதேவி திடீரென்று மரணம் அடைந்ததால், தனது மகள் ஹீரோயினாக நடித்த முதல் படத்தை பார்க்காமலே அவர் சென்றுள்ளார்.

 

தனது மகளை ஹீரோயினாக்கி பார்க்க வேண்டும் என்ற ஸ்ரீதேவியின் ஆசை கனவு நிறைவேறினாலும், அதைப் பார்க்க அவர் பட்ட ஆசை நிறைவேறாமல் போய் விட்டது.

Related News

2058

”பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை” - நடிகர் ஜெயம் ரவி உருக்கம்
Saturday January-11 2025

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

எல்லைகளைத் தாண்டிய சினிமா அனுபவம்! - கவனம் ஈர்க்கும் 'டாக்ஸிக்' கிளிம்ப்ஸ்
Friday January-10 2025

கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...

Recent Gallery