Latest News :

ஸ்ரீதேவியின் மரணத்திற்கு இதுவே காரணம் - உறவினரின் தகவலால் பரபரப்பு!
Monday February-26 2018

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரீதேவி, நேற்று முன் தினம் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக அவரது குடும்பத்தார் தெரிவித்தனர். திருமண நிகழ்ச்சிக்காக துபாய் சென்றவர், பாத்ரூமில் மயங்கிய நிலையில் மீட்டெடுக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதாகவும் தகவல் வெளியானது.

 

தற்போது ஸ்ரீதேவின் உடல் துபாயில் தான் உள்ளது. இன்னமும் அவரது உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே, இன்று மாலை அவரது உடல் மும்பைக்கு வந்தடைந்து விடும் என்றும், இன்று இரவு இறுதிச் சடங்கு நடைபெறும் என்று பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

மேலும், ஸ்ரீதேவி மரணத்தில் மர்மம் இருப்பதாக சில தகவல்கள் கூறுகின்றன. அவரது உடலில் காயம் இருப்பதாகவும், அதன் காரணமாகவே அவரது உடல் குடும்பத்தாரிடம் இன்னும் ஒப்படைக்கப்படவில்லையாம்.

 

இந்த நிலையில், ஸ்ரீதேவின் உறவினரான சஞ்சய் கபூர், ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம் அடையவில்லை, அழகுக்காக அவர் செய்துக் கொண்ட பல்வேறு அறுவை சிகிச்சைகளாலயே அவர் உயிரிழந்திருக்கிறர், என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஸ்ரீதேவி, கடந்த 30 வருடங்களாக உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடித்து வருவதோடு, யோகா, உடற்பயிற்சி போன்றவைகளை செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். அவருக்கு இதற்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டதில்லை, அப்படி இருக்க இப்போது மட்டும் எப்படி மாரடைப்பு ஏற்பட்டிருக்கும், என்று கூறிய சஞ்சய் கபூர், அறுவை சிகிச்சைகளினாலேயே அவர் மரணம் அடைந்தார், என்று திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.

Related News

2067

”பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை” - நடிகர் ஜெயம் ரவி உருக்கம்
Saturday January-11 2025

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

எல்லைகளைத் தாண்டிய சினிமா அனுபவம்! - கவனம் ஈர்க்கும் 'டாக்ஸிக்' கிளிம்ப்ஸ்
Friday January-10 2025

கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...

Recent Gallery