Latest News :

சமூக வலைதளங்களினால் சீரழியும் பெண்களை பற்றி சொல்லும் படம்!
Monday February-26 2018

ஆண்டவர் மூவிஸ் சார்பில் மும்தாஜ் யாஸ்மின் தயாரிக்கும் படம் ‘உயிரே உன்னை நான் அறிந்தேன்’. அறிமுக நாயகர்கள் ராகுல், ஷியாம் மற்றும் அறிமுக நாயகிகள் மோனிஷா, சஞ்சனா ஆகியோருடன் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி வெற்றிச்செல்வன் இயக்குகிறார். ஏ.ஆர்.நேசன் இசையமைக்கும் இப்படத்திற்கு கே.வி.ராஜன் ஒளிப்பதிவு செய்ய, அசோக்தேவன் பாடல்கள் எழுதியுள்ளார்.

 

சமூக வலைதளங்கள் மூலம் பல முன்னேற்றம் உண்டு என்றாலும், அவற்றால் சீரழிவுகளும் கணக்கில் அடங்காதவை. இன்றைய இளைஞர்கள் குறிப்பாக மாணவர்கள் எப்போதும் நேரம் போவது தெரியாமல் பேஸ்புக், ட்விட்டர் என பொழுதை கழித்து வருகிறார்கள். இதனை மைய கருவாகக் கொண்டு தான் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

 

கல்லூரி மாணவி ஒருவளுக்கு சமூக வலைத்தளம் மூலமாக ஒரு நட்பு ஏற்படுகிறது. அது கூடா நட்பு என்று அறியாத அந்த மாணவி முகம் தெரியாத அந்த இளைஞனிடம் தனது மனதை பறிக்கொடுக்கிறாள். இதே வலைதளம் மூலமாக மாணவியின் வாழ்க்கையில் வேறு ஒரு இளைஞன் குறுக்கிடுகிறான். இந்த சிக்கலான பிரச்சினையில் இருந்து அந்த இலம் பெண் எப்படி தன்னை காத்துக் கொள்கிறாள் என்பதன் பின்னணியில், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முக்கோண காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.

 

இப்படத்தின் பெரும்பாலன காட்சிகள் சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. பாடல் காட்சிகள் ஏலகிரி, ஏற்காடு, ஊட்டி ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

Related News

2068

”’இந்தியன் 2’ படம் 5 வருடம் ஆகக் காரணம் நாங்கள் அல்ல” - கமல்ஹாசன் விளக்கம்
Wednesday June-26 2024

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ படம் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!
Wednesday June-26 2024

அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன், பாலிவுட் பக்கம் போனதால் தமிழில் படம் இயக்காமல் இருந்தார்...

சன்னி லியோனுடன் கைகோர்த்த பிரபு தேவா!
Wednesday June-26 2024

எஸ்.ஜே.சினு இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’...