Latest News :

‘6 அத்தியாயம்’ இயக்குநர்களுக்கு அடித்த ஜாக்பாட்!
Monday February-26 2018

கடந்த வாரம் வெளியான ‘6 அத்தியாயம்’ திரைப்படம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வித்தியாசமான முயற்சியாக, 6 கதைகள், 6 இயக்குநர்கள், 1 மானுஷ்ய உணர்வு, என்ற அடிப்படையில் 6 குறும்படங்களை ஒரு திரைப்படமாக தொகுத்து வெளியான இப்படம் பெரும் வெற்றி பெற்றிருப்பது மூலம், குறும்பட இயக்குநர்களுக்கு தமிழ் சினிமாவின் இன்னொறு கதவு திறந்துவிடப்பட்டுள்ளது.

 

‘6 அத்தியாயம்’ படத்தில் ஆறு கதைகளை இயக்கியுள்ள ஆறு இயக்குநர்களுக்கும் தற்போது ஏகப்பட்ட வாய்ப்புகள் வருகிறதாம். பல தயாரிப்பாளர்கள் ”இதே ஜானரில் ஒரு திரைப்படத்தை இயக்கிக் கொடுங்கள்” என்று தினமும் கேட்டுக்கொண்டிருக்க ஜாக்பாட் அடித்த சந்தோஷத்தில் அத்தனை அத்தியாயம் இயக்குநர்களும் குஷியாக உள்ளனர்.

 

இந்த நிலையில், 6 அத்தியாயத்தில் இடம்பெற்ற ‘சித்திரம் கொல்லுதடி’ என்ற படத்தின் இயக்குநரான ஸ்ரீதர் வெங்கடேசன் ‘என் பெயர் ஆனந்தன்’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துவிட்டார். காவ்யா புரொடக்‌ஷன்ஸ் கோபி கிருஷ்ணப்பா மற்றும் சவீதா சினி ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.

 

‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’, ‘தாயம்’ ஆகிய படங்களில் நடித்த சந்தோஷ் பிரதாப்  கதாநாயகனாக நடிக்க, அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்  ‘ஏமாலி’, ‘காதல் கண் கட்டுதே ’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர். மேலும் தீபக் பரமேஷ், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். 

 

இந்தப்படம் ஐந்து நபர்களின் கூட்டு முயற்சியால் உருவாகி இருக்கிறது. அத்துடன் இந்த ஐந்து தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் ஸ்ரீதர் வெங்கடேசன்.  

 

த்ரில்லர் இவருக்கு பிடித்த ஏரியா என்பதாலோ என்னவோ, ‘என் பெயர் ஆனந்தன்’ படத்தையும் முழுநீள த்ரில்லராகவே உருவாக்கியுள்ளார். ஆனால் ஆச்சர்யம் என்னவென்றால் த்ரில்லருக்கென்றே உள்ள வழக்கமான கதைக்களங்களை தேர்வு செய்யாமல் சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து நாடகம், தெருக்கூத்து கலைகளை பின்னணியாக கொண்டு இந்தப்படத்தை உருவாக்கியுள்ளார். 

 

அதுமட்டுமல்ல, இந்தப்படம் தமிழையும், தமிழர் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது என்பது இன்னொரு ஆச்சர்யம். தமிழ்நாடு முழுதும் இந்த கதை குறித்த தேடல், ஆராய்ச்சியில் ஈடுபட்ட இயக்குனர் ஸ்ரீதர் வெங்கடேசன், இந்தப்படத்தை த்ரில்லர் பாணியில் உருவாக்கியது  நிச்சயம் தமிழ் சினிமாவுக்கு புதிதாக இருக்கும். 

 

அதுமட்டுமல்ல மேலும் தமிழ் சினிமா வரலாற்றில்  முதன்முறையாக ஒரு புதுமுயற்சியாக க்ளைமாக்சுக்கு சற்று முன்பாக 12 நிமிடங்கள் கொண்ட பாடல் காட்சி இடம்பெறுகிறது.  வழக்கமான பாடல்  ( காதல் பாடல் )  போல் இல்லாமல் உணர்வு பூர்வமான பாடலாக இருக்கும். படத்தின் உயிர்நாடியாக இருக்கும் இந்தப்பாடல் ரசிகர்களுக்கு வெவ்வேறு உணர்வுகளை கடத்தும். மேலும் வழக்கமான பாணியில் இருந்து மாறுபட்டு படத்தின் ஒவ்வொரு கேரக்டரையும் உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஸ்ரீதர். 

 

சீமைத்துரை, நெடுநல்வாடை ஆகிய படங்களுக்கு இசையமைத்த ஜோஸ் பிராங்க்ளின் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மனோராஜா ஒளிப்பதிவு செய்ய; விஜய் ஆண்ட்ரூஸ் படத்தொகுப்பை கவனிக்கிறார். 

 

இன்னும் ஒரு புதிய முயற்சியாக ஹாலிவுட் படங்களில் பிரபல திரைக்கதை ஆலோசகராக பணியாற்றும் மைக் வில்சன்  என்பவருடன் கலந்து விவாதித்து புதிய பாணியிலான திரைக்கதையை உருவாக்கி உள்ளார்கள் என்பது இந்தப்படத்திற்கு பிளஸ் பாயிண்ட். 

 

இந்தப்படம் முடிவடைந்த நிலையில் படத்தை பார்த்த சிலர், இந்தப்படம் வெளியாகும்போது, 'அருவி' படம் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதேபோன்ற ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆச்சர்யம் தெரிவித்தார்களாம். 

 

மதுரை, திருவண்ணாமலை மற்றும் சென்னை அதன் சுற்றுப்புறங்களில் இதன் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.. போஸ்ட் புரொடக்சன் இறுதிக்கட்டத்தில் இருக்கும் இந்தப்படம் விரைவில் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

Related News

2070

”இந்த அளவிற்கு கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை” - ‘லப்பர் பந்து’ வெற்றி குறித்து ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி பேச்சு
Thursday September-26 2024

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

இந்தியில் வெற்றி பெற்ற ‘கியாரா கியாரா’ இணையத் தொடர் தமிழ் மற்றும் தெலுங்கிலும் ஒளிபரப்பாகிறது!
Thursday September-26 2024

ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து,  செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின்  தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் சீசன் 8’! - அக்டோபர 6 ஆம் தேதி ஒளிபரப்பாகிறது
Thursday September-26 2024

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான  விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...

Recent Gallery