Latest News :

ஸ்ரீதேவி மரணத்தில் தொடரும் மர்மம் - கணவரிடம் துபாய் போலீஸ் விசாரணை!
Tuesday February-27 2018

துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளதால் பாலிவுட் திரையுலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

கடந்த வாரம் தனது உறவினர் திருமணத்திற்கு குடும்பத்துடன் துபாய் சென்று இருந்த ஸ்ரீதேவி, திருமணம் முடிந்து கணவர் மற்றும் அவரது குழந்தைகள் மும்பை திரும்பிவிட, ஸ்ரீதேவி மட்டும் ஷாப்பிங் செல்வதற்காக துபாயில் தங்கி விட்டார். முன்பு இருந்த ஹோட்டலை காலி செய்துவிட்டு, ஜுமைரா எமிரேட்ஸ் டவர்ஸில், அறை எண் 2201ல் தங்கியுள்ளார்.

 

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு தனது மனைவிக்கு ஆச்சரிய விருந்து கொடுக்க மும்பையில் இருந்து போனி கபூர் துபாய் சென்றதாகவும், சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்த இவர்கள் ஹோட்டல் செல்ல தயாராகி உள்ளனர். அப்போது குளியறைக்கு சென்று இருந்த ஸ்ரீதேவி மாரடைப்பு ஏற்பட்டு, அங்குள்ள பாத் டப்பில் தவறி விழுந்து இறந்துவிட்டதாக முதல் கட்ட தகவல் வெளியானது.

 

ஆனால், தடவியல் நிபுணர்கள் நடத்திய சோதனையில், அவரது ரத்தத்தில் ஆல்கஹால் இருந்ததும், எதிர்பாராமல் பாத் டப்பில் தவறி விழுந்து இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை நேற்று கலீத் டைம்ஸ் வெளியிட்டு இருந்தது. ஆனால், இந்த சோதனை அறிக்கையில் தனக்கு திருப்தியில்லை என்று தடவியல் இயக்குநர் கையெழுத்திட மறுத்துவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

மேலும், ஒன்றரை அடி உள்ள பாத் டப்பில் எப்படி ஸ்ரீதேவி தவறி விழக்கூடும் என்று துபாய் அரசு வழக்கறிஞர் கேள்வி எழுப்பியதாகவும், ஸ்ரீதேவி மூச்சு முட்டியே உயிரிழந்திருக்க கூடும், என்றும் கூறியுள்ளனர். இதையடுத்து, ஸ்ரீதேவின் கணவர் போனி கபூரிடம் துபாய் போலீசார் விசாரணை நடத்தியுள்ளார்கள்.

 

திருமணம் முடிந்ததும் துபாயில் இருந்து சென்ற போனி கபூர் திரும்ப துபாய் வந்தது ஏன்? துபாய் வந்தவர் ஸ்ரீதேவியை சந்தித்து பேசிய சில நிமிடங்களில் அவர் பாத்ரூமில் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். ஆனால், இரவு 10.30 மணிக்கு தான் ஸ்ரீதேவி இறந்துவிட்ட செய்தி வெளியாகியிருக்கிறது. அதுவரை அவர் பாத்ரூமில் தான் இருந்திருக்கிறார், ஆனால் போனி கபூர், ஸ்ரீதேவி பாத்ரூம் சென்ற 15 நிமிடத்தில் கதவை தட்டியதாகவும், அவரிடம் பதில் வராததால் உறவினர் ஒருவரை அழைத்து கதவை உடைத்துப் பார்த்ததாகவும் கூறியுள்ளார். இதனால், துபாய் போலிஸுக்கு ஸ்ரீதேவி மரணத்தின் மீது சந்தேகம் எழுந்துள்ளது. 

Related News

2075

”பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை” - நடிகர் ஜெயம் ரவி உருக்கம்
Saturday January-11 2025

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

எல்லைகளைத் தாண்டிய சினிமா அனுபவம்! - கவனம் ஈர்க்கும் 'டாக்ஸிக்' கிளிம்ப்ஸ்
Friday January-10 2025

கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...

Recent Gallery