அரசியலில் இரு துருவங்களாக இருக்கும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும் நடிகையுமான குஷ்புவும், திரைப்பட இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமானம் தற்போது ஒரே அணியில் இணைந்துள்ளனர். இவர்களை டிராபிக் ராமசாமி இணைத்துள்ளார்.
ஆம், டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை திரைப்படமாகிறது. ‘டிராபிக் ராமசாமி’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தில் டிராபிக் ராமசாமி வேடத்தில் பிரபல இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கிறார். அவரது மனைவியாக ரோகினி நடிக்கிறார். விக்கி என்ற அறிமுக இயக்குநர் இப்படத்தை இயக்குகிறார். இவர் பூனா திரைப்படக் கல்லூரியில் திரைத் தொழில்நுட்பம் படித்துவிட்டு, கடந்த 5 ஆண்டுகளாக எஸ்.ஏ.சந்திரசேகரிம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
மக்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘டிராபிக் ராமசாமி’ படத்தில் தாங்களும் இருக்க வேண்டும் என்று விரும்பிப் பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். பிரகாஷ்ராஜ், எஸ்.வி.சேகர், ஆர்.கே.சுரேஷ், அம்பிகா, உபாசனா, கஸ்தூரி, மனோபாலா, மதன் பாப், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, மோகன்ரான், சேத்தன், தரணி, அம்மு ராமச்சந்திரன், பசி சத்யா என்று பலர் நடித்துள்ள இப்படத்தில் அரசியலில் இரு துருவங்களாக இருக்கும் சீமானும், குஷ்புவும் இணைந்து நடித்துள்ளனர்.
அரசியலில் கொள்கை ரீதியாக வேறுபட்டு இருக்கும் குஷ்புவும், சீமானும் இணைந்து நடித்திருப்பது இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. இருவரும் படத்தின் மிம முக்கியமான வேடங்களில் நடித்திருக்க, அவர்களது வேடம் சஸ்பெண்ஸாக வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, இப்படத்தில் கெளரவம் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
படம் குறித்து இயக்குநர் விக்கி கூறுகையில், “நம் சமுதாயத்துக்காக யாரையும் எதிர்பார்க்காமல் ஒன் மேன் ஆர்மியாக 18 ஆண்டுகள் போராடி வரும் ஒருவரை நாட்டு மக்களுக்கு சரியாகக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நினைத்தேன். அவரது "ஒன் மேன் ஆர்மி' என்கிற வாழ்க்கைக் கதையைப் படித்த போது இதைப் படமாக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அவர் மன வலிமை உள்ளவர். ஆனால் பழக எளிமையானவர். எஸ்.ஏ.சி அவர்கள் நடிக்க முன் வந்ததுமே படம் பெரிய அளவில் மாறிவிட்டது.” என்றார்.
படம் குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் கூறுகையில், “டிராபிக் ராமசாமி வாழ்க்கையைப் பற்றி முழுதாக அறிந்ததும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எனக்கும் அவருக்கும் காதல் திருமணம், சட்டப் போராட்டம் போன்று பலவற்றில் ஒற்றுமைகள் இருந்தன. அவரை நேரில் சந்தித்த போது 83 வயதில் இவ்வளவு சுறுசுறுப்பா என்று வியப்பூட்டினார். அவரது உடல் மொழிகளை நேரில் கவனித்துக் கற்றுக் கொண்டேன் அதன்படி படத்தில் நடித்தேன்.” என்றார்.
தனது வாழ்க்கையை சொல்லும் படம் குறித்து டிராபிக் ராமசாமி கூறுகையில், “என்னைப் பற்றிப் படமெடுக்க முன் வந்தது மகிழ்ச்சி. யார் யாரோ கேட்டார்கள் ஆனால் யாரும் துணிச்சலாக முன்வரவில்லை. இவர்கள் வந்திருக்கிறார்கள். இதுவே தமிழ் நாட்டுக்கு வரப்போகும் பெரிய மாற்றத்துக்கான அறிகுறி என்று கூறலாம்.” என்றார்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...