தொழில்நுட்ப வளர்ச்சிகளில் ஒன்றான இணையதளமும், ஸ்மார்ட்போனும் ஒருவர் கையில் இருந்தால் போதும், உலகத்தில் நடக்கும் அத்தனை விஷயங்களையும் உள்ளங்கையில் வைத்திருப்பார்கள். பல முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் இத்தகைய தொழில்நுட்ப வளர்ச்சி சில, சிலருக்கு அழிவையும் தேடி தருகின்றது.
அந்த வரிசையில் ஒன்று தான் ஆபாச இணையதளங்கள். இதுபோன்ற இணையதளங்களில் ஆபாச படங்களை வெளியிடுவதோடு, பலரது அந்தரங்க வாழ்க்கையையும் வெளியிட்டு, அவர்களது வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக அழிக்கும் சம்பவங்கள் இந்தியாவில் பல நடந்து வருகின்றது.
இதற்கு காரணமாக பல ஆபாச இணையதளங்கள் இருந்தாலும், அதில் முக்கியமானதாக கருதப்படும் ‘எக்ஸ் வீடியோஸ்’ என்ற இணையதளத்தால் பாதிக்கப்படும் பெண்களும், ஆண்களும் எராளம். தங்களது அந்தரங்க வீடியோக்கள் எப்படி இதுபோன்ற தளத்தில் வெளியானது என்பது கூட தெரியாமல் பலர் பறிதவித்துக் கொண்டிருக்க, அவர்களுக்கான ஒரு விளக்கமாகவும், அவர்களைப் போல இனி வேறு யாரும் இப்படிப்பட்ட விஷயங்களில் சிக்கிக்கொள்ள கூடாது என்பதற்காகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உருவாகியிருக்கும் திரைப்படம் தான் ‘எக்ஸ் வீடியோஸ்’.
படத்தின் தலைப்பை பார்த்தவுடனே, இது அப்படிப்பட்ட படமாக இருக்குமோ!, என்று நினைக்க தோன்றும். ஆனால், இப்படத்தில் ஒரு படுக்கை அறை காட்சி கூட இல்லை என்பது தான் உண்மை. மக்களை காவு வாங்கும் ஒரு ஆபாச இணையதளத்திற்கு எதிரான ஒரு படமாக உருவாகியிருக்கும் இப்படத்தை இயக்கியிருக்கும் சஜோ சுந்தர், இயக்குநர் ஹரி மற்றும் பிரகாஷ்ராஜிடம் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
கமர்ஷியலாக படம் எடுத்து வெற்றி பெறும் அனைத்து விஷயங்களையும் தன்வசம் வைத்திருக்கும் சஜோ சுந்தர், வெறும் கமர்ஷியல் படம் என்ற பாதையில் பயணிக்காமல் மக்களுக்கும் சமூகத்திற்கும் தனது திரைப்படம் மூலம் ஏதாவது நல்லது சொல்ல வேண்டும், என்பதற்காகவே இப்படிப்பட்ட ஒரு படத்தை இயக்கியிருக்கிறாராம்.
யார் பார்கிறார்களோ இல்லையோ, இந்த படத்தை பெண்கள் நிச்சயம் பார்க்க வேண்டும். ஆபாச சமூக வலைதளங்களினால் தற்போது பல பெண்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இதுபோன்ற ஒரு படம் அவர்களுக்கு அறிவுரையாக இருப்பதோடு, அவர்களை உஷார்ப்படுத்தும் ஒரு எச்சரிக்கை மணியாகவும் அமையும்.
இப்படம் வெளியாவதற்கு முன்னதாக எக்ஸ் வீடியோஸ் ஆபாச வலைத்தளம் குறித்து உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர போவதாகவும் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
அஜய்ராஜ், பிரபுஜித், ஆஹிருதி சிங், ரியாமிக்கா, ஷான் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை கலர் ஷாடோஸ் எண்டெர்டெய்ண்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. மெட்ரோ பட இசையமைப்பாளர் ஜோகன் இசையமைத்துள்ளார். விரைவில் இந்தப்படம் தமிழ் மற்றும் இந்தியில் வெளியாக இருக்கிறது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...