Latest News :

மீனவர்களின் கண்ணீர் வாழ்க்கையை சொல்லும் ‘முந்தல்’ பட பாடல்!
Tuesday March-06 2018

பிரபல ஸ்டண்ட் இயக்குநர் ஜெயந்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘முந்தல்’ தணிக்கை குழுவினரின் பாராட்டோடு யு சான்றிதழ் பெற்றுள்ளது. விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் கதையம்சம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அதிரடியான அட்வென்சர் காட்சிகள் நிறைந்த ஆக்‌ஷன் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் சித்த வைத்தியத்தின் முக்கியத்துவத்தையும், நம் நாட்டு உணவு பழக்கம் எத்தகைய மருத்துவ குணங்களை கொண்டது என்பதையும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இதை அட்வைஸ் போல அல்லாமல் அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் பல சாகசக் காட்சிகளுடன் சொல்லியிருப்பது தான் படத்தின் ஸ்பெஷல்.

 

சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது போல படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகும் அளவுக்கு சிறப்பாக வந்திருக்கிறது. மறைந்த பாடலாசிரியர் அண்ணாமலை, கனி அமுதன், மதன்குமார், தர்மபுத்திரன் ஆகியோர் பாடல்களுக்கு கே.ஜெய்கிருஷ் இசையமைத்துள்ளார்.

 

அண்ணாமலை வரிகளில் உருவாகியுள்ள “அஸ்கா புஸ்கா...” பாடல் ஆட்டம் போடும் வகையில் செம குத்துப்பாடலாக உருவாகியிருக்கிறது. தர்மபுத்திரன் வரிகளில் உருவாகியுள்ள மீனவர்கள் பற்றிய பாடல் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் மீனவர்கள் பற்றிய பாடல்கள் என்பது அறிதான ஒன்று தான். அப்படி ஒரு படத்தில் மீனவர்களைப் பற்றி பாடல் வந்தால் அந்த பாடலும், படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. 

 

அந்த வரிசையில், ”கண்ணீர தான் துடைக்க தண்ணீரில் போறோம்...காற்றையும் அலையையும் போறாடி வாறோம்...மீனவர் வாழ்க்கை எல்லாம் மீளாத சோகம்...கண் இருந்தும் இருட்டு வாழ்க்கை வாழ்கிறோம் ஒவ்வொரு நாளும்...கரைக்கு வந்தா பிள்ளைக்கு அப்பா...இல்லனா கடலுக்கே உப்பா...” என்ற வரிகைகளைக் கொண்ட ‘முந்தல்’ மீனவப் பாடலும் நிச்சயம் ரசிகர்களிடம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இப்பாடலோடு இடம்பெற்றுள்ள மற்ற பாடல்கள் என படத்தில் உள்ள 5 பாடல்கள் ஒவ்வொரு விதத்தில் ரசிகர்களை கவரும் பாடல்களாக அமைந்துள்ளது.

 

வேல்முருகன், பிரியா இமேஷ், அனிதா கார்த்திகேயன் என முன்னணி பாடகர்கள் பாடியுள்ள இப்பாடல்கள் ரசிகர்களிடம் பெற்ற வரவேற்பை தொடர்ந்து படத்தையும் விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Related News

2085

”பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை” - நடிகர் ஜெயம் ரவி உருக்கம்
Saturday January-11 2025

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

எல்லைகளைத் தாண்டிய சினிமா அனுபவம்! - கவனம் ஈர்க்கும் 'டாக்ஸிக்' கிளிம்ப்ஸ்
Friday January-10 2025

கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...

Recent Gallery