கிரியாமைன்ஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் விஜயன்.சி என்பவர் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘பேரழகி ஐ.எஸ்.ஓ’. இதில் ஹீரோவாக விவேக் நடித்துள்ளார். இவர் ‘நீ என்ன மாயம் செய்தாய்’, ‘மித்ரா’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். விஜய் ஆண்டனியின் ‘காளி’ படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள ஷில்பா மஞ்சுநாத் இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
மேலும், நடிகை சச்சு, இயக்குநர் சரவண சுப்பையா, லிவிங்ஸ்டன், ஆர்.சுந்தராஜன், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ‘நாகேஷ் திரையரங்கம்’ புகழ் இ.ஜே.நவ்ஷாத் ஒளிப்பதிவு செய்ய, சார்லஸ் தனா இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் சமீபத்தில் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.
படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் இப்படத்தின் இசை வெளியீடு விரைவில் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து படம் வெளியிடப்பட உள்ளது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...