Latest News :

’செயல்’ படத்திற்கு யு சான்றிதழ்!
Thursday March-01 2018

சி.ஆர் கிரியேசன்ஸ் நிர்மலா ராஜன் வழங்கும் திவ்யா ஷேத்ரா பிலிம்ஸ் தயாரிக்கும் முதல் படம் ‘செயல்’. ராஜன் தேஜேஸ்வர் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் தருஷி என்ற புதுமுகம் ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் ரேணுகா, முனீஸ்காந்த், சூப்பர் குட் சுப்பிரமணியம், வினோதினி, தீப்பெட்டி கணேசன், ஆடுகளம் ஜெயபாலன், தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். வில்லனாக சமக் சந்திரா அறிமுகமாகிறார்.

 

வி.இளையராஜா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்க, ஆர்.நிர்மல் எடிட்டிங் செய்கிறார். லலிதானந்த், ஜீவன் மயில் ஆகியோர் பாடல்கள் எழுத, கனல் கண்ணன் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்கிறார். பாபா பாஸ்கர், ஜானி ஆகியோர் நடனம் அமைக்க, ஜான் பிரிட்டோ கலையை நிர்மாணிக்கிறார். ஏ.பி.ரவி தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்கிறார். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ரவி அப்புலு இயக்குகிறார். 

 

பக்கா கமர்சியல் படமாக உருவாகியுள்ள ‘செயல்’ படத்தை சமீபத்தில் பார்த்த தணிக்கை குழுவினர் படத்தை வெகுவாக பாராட்டியதோடு யு சான்றிதழும் வழங்கியுள்ளனர்.

Related News

2088

எல்லைகளைத் தாண்டிய சினிமா அனுபவம்! - கவனம் ஈர்க்கும் 'டாக்ஸிக்' கிளிம்ப்ஸ்
Friday January-10 2025

கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...

பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும் ‘தருணம்’!
Thursday January-09 2025

அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...

Recent Gallery