ஹாலிவுட் தரத்தில் போஸ்ட் புரடக்ஷன்ஸ் ஸ்டூடியோ. முகப்பேரில் டப்பிங், ரெக்கார்டிங், மிக்சிங், அனைத்தும் ஒரே இடத்தில் செய்யும் வசதியுடன் உதயமாகியுள்ளது த்ரயா ஸ்டூடியோ. ஜீலியும் நான்கு பேரும் படத்தின் இசையமைப்பாளர் கு சவன் குமார் சினிமா மீதான காதலால் ஒலியை துல்லித்தன்மையுடன் உருவாக்க இந்த ஸ்டூடியோவை நிர்மாணித்திருக்கிறார்.
இங்கு பயன்படுத்தபடும் கருவிகள் மிகப்பெரும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து தன் கனவு ஸ்டூயோவை உருவாக்கியிருக்கிறார். ஒலி சம்மந்தமான ரெக்கார்டிங், ரீரெக்கார்டிங் , மிக்ஷிங், மாஸ்டரிங் போன்ற எல்லா போஸ்ட் புரடக்ஷனஸ் வேலைகளுக்கு வெளியே எங்கும் செல்லாமல் ஒரே இடத்தில் நடைபெறுவதற்கு ஏற்றவாறு இந்த ஸ்டுடியோ அமைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் இங்கே மிக்ககுறைந்த பட்ஜெட்டில் மிக நவீனமான தரமான போஸ்ட்புரடக்ஷன் வேலைகளை செய்து முடிக்க முடியும்.கடந்த ஜனவரி மாதம் பாடகி சித்ரா, உண்னிகிருஷ்னன் மற்றும் இசையமைப்பாளர் ஷிரத் இந்த ஸ்டூடியோவை திறந்து வைத்தனர். மூவரும் இந்த ஸ்டூடியோ தனித்தனமையுடம் மிகுந்த நவீனமாக தரமுடன் இருப்பதாக பாரட்டினர். சென்னை முகப்பேரில் அமைந்துள்ள இந்த ஸ்டூடியோவில் பல படங்களின் வேலைகள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இந்த ஸ்டூடியோவில் பெரிய நிறுவனக்களின் ஸ்டுடியோ போல் லைவ் ரெக்கார்டிங் செய்யும் வசதி உள்ளது. ஒரே நேரத்தில் 12 வயலின்கள் இணந்து வாசிப்பதற்கான இடம் இங்கு அமைந்துள்ளது. மேலும் சென்னையிலேயே மிகத்துல்லியமான சவுண்டை உருவாக்கும் உபகரணங்கள் இங்கு உள்ளது. இங்கு திரைப்பட வேலைகளை மேற்கொண்டவர்கள் இந்த ஸ்டூடியோவின் ஒலித்திறனை வியந்து பாராட்டினர். சவுண்டுக்கு எனத்தனியே ஹாலிவுட் தரத்தில் அமைந்திருக்கும் ஒரே ஸ்டூடியோவான த்ரயா ஸ்டூடியோ அமைம்ந்துள்ளது. வெகு குறைந்த காலத்தில் திரைப்பட தொழிநுட்ப கலைஞர்களின் நற்பெயர் பெற்றுள்ள இந்த ஸ்டூடியோ இப்போது பல படங்களுக்கு ஒலி வேலைகளை செய்து வருகிறது.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...