தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவரும் விஜய் சேதுபதி, அவ்வபோது பிற ஹீரோக்களின் படங்களில் பின்னணி குரல் கொடுத்தும் ரசிகர்களை கவர்ந்து வந்தவர், இனி பாடகராகவும் கவரப்போகிறார்.
ஆம், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் ‘பேய் பசி’ என்ற படத்தில் விஜய் சேதுபதி ஒரு பாடல் பாடியிருக்கிறார்.
ஸ்ரீநிவாஸ் கவிநயன் இயக்கத்தில் ஹரி கிருஷ்ணா பாஸ்கர் ஹீரோவாக நடிக்கும் ‘பேய் பசி’ படத்தை ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடேட் நிறுவனம் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் கிளப் பாடல் ஒன்று இடம்பெறுகிறது. அப்பாடலை வித்தியாசமன குரல் வளம் கொண்ட யாராயாவது பாட வைக்க வேண்டும் என்று நினைத்த யுவன், விஜய் செதுபதியிடம் தனது விருப்பத்தை சொல்ல, அவரும் உடனே சம்மதம் தெரிவித்து பாடகராகிவிட்டார்.
டோனி சான் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பூர்ணிமா ராமசாமி ஆடை வடிமைப்பு செய்துள்ளார். மோகன் முருகதாஸ் எடிட்டிங் செய்ய, மதன் கலையை நிர்மாணித்துள்ளார்.
விறுவிறுப்பான பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் ‘பேய் பசி’ விரைவில் வெளியாக உள்ளது.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...