’கபாலி’ யை தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியிருக்கும் இரண்டாவது படம் ‘காலா’. நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கும் இப்படம் மக்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், மார்ச் 1 ஆம் தேதி டீசர் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், காஞ்சி ஜெயேந்திரர் மரணம் அடைந்ததால் டீசர் வெளியீட்டை தள்ளி வைப்பதாக தனுஷ் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று நள்ளிரவு வெளியான ‘காலா’ டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருப்பதோடு, சமூக வலைதளங்களில் வைரலாகவும் பரவி வருகிறது. டிரைலரில், ”இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்த பாத்தது இல்ல..ல ..? பாப்பீங்க!!!” என்று ரஜினிகாந்த் பேசும் வசனம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மும்பையில் வாழ்த்த தமிழ் தாதா ஒருவரைப் பற்றிய படமாக உருவாகியிருக்கும் ‘காலா’ ஏப்ரல் 27 ஆம் தேதி வெளியாகிறது.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...