‘துப்பறிவாளன்’ படத்திற்கு பிறகு விஷால் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘இரும்புத்திரை’. பி.எஸ்.மித்ரன் என்ற அறிமுக இயக்குநர் இயக்கியுள்ள இப்படத்தில் வில்லனாக அர்ஜுன் நடித்திருக்கிறார். ஹீரோயினாக சமந்தா நடித்திருக்கிறார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு சில காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது நடைபெற்று வரும் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தவுடன் ‘இரும்புத்திரை’ படத்தை வெளியிட விஷால் முடிவு செய்துள்ளார்.
விஷாலின் சொந்த நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி தயாரித்துள்ள இப்படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை ‘புலி’ படத்தை தயாரித்த தமீன்ஸ் பிலிம்ஸ் சிபு தமீன்ஸ் கைப்பற்றியுள்ளார்.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...