சினிமாத் துறையில் வாய்ப்புக்காக நடிகைகள் பலர் படுக்கையை பகிர்ந்துக் கொளவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், பல நடிகைகள் தங்களது நேர்ந்த பாலியல் தொல்லை அனுபவங்களை வெளிப்படையாக கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில், தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வளர்ந்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங், பெங்களூரில் அளித்த பேட்டியில், வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் குறித்து பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பேசிய ரகுல் ப்ரீத் சிங், “நான் இயற்கையாகவே கடின உழைப்பாளி. நான் எங்கு வேலை செய்கிறேனோ அவர்கள் பேசும் மொழியை கற்பது என் கடமை. தெலுங்கு திரையுலகில் பணியாற்றத் துவங்கியதும் அந்த மொழியை கற்கத் துவங்கிவிட்டேன்.
நான் ஒரு தென்னிந்திய நடிகை. நான் வடக்கில் இருந்து வந்ததாக மீடியாக்கள் சில சமயம் கூறுவது வேதனையாக உள்ளது. நான் ஒரு தெலுங்கு அம்மாயி. தெலுங்கு பேசுபவர்களை எங்காவது பார்த்தால் உடனே நானும் தெலுங்கில் பேசுகிறேன்.
நாட்டில் நடக்கும் பலாத்காரங்களை மக்கள் மறந்துவிடுகிறார்கள். பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது பற்றி அதிகம் பேசுவதற்கு காரணம், அதில் மசாலா இருக்கிறதே. இது ஆண் ஆதிக்கம் மிக்க உலகம். இயற்கையாகவே மனிதர்கள் சந்தர்ப்பவாதிகள்.
நான் 20 படங்களில் நடித்துவிட்டேன். இதுவரை யாரும் என்னை படுக்கைக்கு அழைக்கவில்லை. திறமை இருந்தால் மட்டுமே திரையுலகில் சாதிக்க முடியும். சில விஷயங்கள் கேள்விப்பட்டிருக்கிறேன். அது எப்படி டென்று தெரியவில்லை. என்னை சுற்றி நல்லவர்களே உள்ளனர். நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி.” என்று தெரிவித்துள்ளார்.
கார்த்தி, சூர்யா என்று தமிழில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங், விரைவில் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் ஹீரோயினாக உருவெடுப்பார் என்று கோடம்பாக்கமே எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறது.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...