Latest News :

கார்த்தியுடன் இணையும் கார்த்திக்!
Saturday March-03 2018

’தீரன் அதிகாரம் ஒன்று’ வெற்றியை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் விவசாயி வேடத்தில் நடித்து வரும் கார்த்தி, அடுத்ததாக அறிமுக இயக்குநர் ஒருவரது படத்தில் நடிக்கிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு இமயமலை மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற உள்ளது. 

 

இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க, முக்கிய வேடம் ஒன்றில் நவரச நாயகன் கார்த்திக் நடிக்கிறார். இதன் மூலம் கார்த்தி மற்றும் கார்த்திக் முதன் முறையாக இணைகிறார்கள். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.விக்னேஷ், அம்ருதா, ரேணுகா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

 

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகும் ரஜத் ரவிசங்கர், ‘எங்கேயும் எப்போதும்’ சரவணன், இந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப், இயக்குநர் ஆர்.கண்ணன் ஆகியோருடன் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

 

ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட்டிங் செய்கிறார். ஜெயஸ்ரீநாராயணன் கலையை நிர்மாணிக்க, அன்பறிவ் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்கின்றனர். கபிலன், தாமரை, விவேக் ஆகியோர் பாடல்கள் எழுத, கே.வி.துரை நிர்வாக தயாரிப்பை கவனிக்கிறார். 

 

ரிலையன்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் வழங்க, பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லஷ்மண்குமார் இப்படத்தை தயாரிக்கிறார். இவர் சூர்யா நடித்த ‘சிங்கம் 2’ படத்தை தயாரித்தவர். மேலும், திரிஷா நடிப்பில், ஆர்.மாதேஷ் இயக்கத்தில் விரைவில் வெளியாக உள்ள ‘மோகினி’ படத்தையும் இவர் தயாரித்திருக்கிறார்.

 

இப்படத்தின் தொடக்க விழா இன்று (பிப்.3) சென்னையில் பூஜையுடன் நடைபெற்றது. படப்பிடிப்பு இம்மாதம் 8 ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இதையடுத்து ஐரோப்பிய நாட்டில் 15 நாட்களும், ஐதராபாத், மும்பை, இமயமலை பகுதிகளிலும் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

Related News

2099

”’இந்தியன் 2’ படம் 5 வருடம் ஆகக் காரணம் நாங்கள் அல்ல” - கமல்ஹாசன் விளக்கம்
Wednesday June-26 2024

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ படம் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!
Wednesday June-26 2024

அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன், பாலிவுட் பக்கம் போனதால் தமிழில் படம் இயக்காமல் இருந்தார்...

சன்னி லியோனுடன் கைகோர்த்த பிரபு தேவா!
Wednesday June-26 2024

எஸ்.ஜே.சினு இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’...