கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து தனது ஒவ்வொரு படத்தின் மூலமாக ரசிகர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தி வரும் இயக்குநர் விஜய், தனது படங்களில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மேலோங்கி இருக்கும்படி பார்த்துக்கொள்வார். அவரது படங்களைப் போல, அப்படங்களின் பாடல்கள் மற்றும் அதன் பீஜியமும் ரசிகர்களின் மனதிற்கு நெருக்கமானவைகளாக இருக்கும்.
அந்த வரிசையில், விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கரு’ படத்தின் பாடல்களும் மக்களின் மனதிற்கு நெருக்கமான பாடல்களாக அமைந்திருக்கிறது.
இப்படத்தின் மூலம் ‘பிரேமம்’ புகர் சாய் பல்லவியும், தெலுங்கு நடிகர் நாக செளர்யாவும் தமிழில் அறிமுகமாகிறார்கள் என்பது மற்றொரு சிறப்பாகும்.
விஜய் தனது ரெகுலரான கூட்டணியை உடைத்து முதல் முறையாக தனது குழுவின் புதிய இசையமைப்பாளரை இணைத்துக் கொண்டுள்ளார். சமீபகாலமாக தமிழ் சினிமாவில் கவணிக்கத்தக்க ஒரு நபராக உருவெடுத்து வரும் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையில் உருவாகியுள்ள ‘கரு’ பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இது குறித்து கூறிய இயக்குநர் விஜய், “சமீபகாலத்தில் தமிழ் சினிமாவின் சிறந்த கண்டுபிடிப்பு இசையமைப்பாளர் சாம் சி.எஸ். கதையையும், பாடல்களின் சூழ்நிலையையும் சரியாக புரிந்துக் கொண்டு அசத்துபவர் அவர். இந்த படத்தின் அவரது பாடல்கள், எனது எல்லா படங்களின் மிக சிறந்த பாடல்களில் பட்டியலில் நிச்சயம் இடம் பெறும். ‘கரு’ படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் தந்த்ரிஉக்கும் வரவேற்பு எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. ஏனென்றால் நான் அதை எதிர்ப்பார்த்தது தான். இந்த பாடல்களை போல்வே படமும் ஜீவனுடன் அழகாக இருக்கும் என நான் உறுதியாக கூறுவேன்.” என்றார்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...