’குற்றம் 23’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ரெதான் - தி சினிமா பீப்பிள் நிறுவனம் சார்பாக இந்தர் குமார், மீண்டும் அருண் விஜயை வைத்து தயாரிக்கும் படம் ‘தடம்’. மிகபிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார்.
இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக தான்யா ஹோப், ஸ்முருதி ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் பெப்சி விஜயன், யோகி பாபு, ஜார்ஜ், சோனியா அகர்வால், வித்யா பிரதீப், மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
மகிழ் திருமேணி - அருன் விஜய் கூட்டணியில் ‘தடையறத்தாக்க’ பெரும் வெற்றி பெற்றதால், இவர்கள் கூட்டணியில் உருவாகியுள்ள இரண்டாவது படமான ‘தடம்’ மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது டப்பிங் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், இறுதிக் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் தமிழ் புத்தாண்டுக்கு ‘தடம்’ படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...