சமூக வலைதளங்களில் சர்ச்சையான கருத்துக்களை கூறி வரும் நடிகை கஸ்தூரி, அதனாலேயே மக்களிடம் பிரபலமடைந்து வருகிறார். ரஜினி, கமல், ஜெயலலிதா, கருணாநிதி என்று எந்த துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும் அவர்கள் குறித்து அவ்வபோது கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருவதால், கஸ்தூரியை சமூக வலைதளங்களில் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தும் வருகிறது.
இதற்கிடையே, கடந்த 22 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தும் சிறுவனை அடித்தும் கொன்ற சம்பவம் தமிழக மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரி, ஒரு குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். இதனால் ட்விட்டரில் பெரும் சர்ச்சை வெடித்தது.
இந்த நிலையில், கஸ்தூரி கூறி வரும் கருத்துக்களால் இரு சமூகத்தினரிடையே சண்டை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, ஒரு அமைப்பு சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறது.
இந்த புகார் மீது காவல் துறை நடவடிக்கை எடுத்தால், சமூகத்தில் கலவரம் ஏற்படும் விதத்தில் பேசிய குற்றத்திற்காக கஸ்தூரி கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...