கடந்த 2004 ஆம் ஆண்டு சுந்தரி பிலிம்ஸ் சார்பாக எம்.ஞானசுந்தரி தயாரிப்பில் ஷிவ்ராஜ் இயக்கத்தில் சத்யராஜ் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘அடிதடி’. தற்போது இதே வெற்றிக் கூட்டணி பிரம்மாண்டமான ஒரு படத்திற்காக மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.
‘சினிமா நடிகனும் அரசியல்வாதியும்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சுந்தரி பிலிம்ஸ் சார்பாக எம்.ஞானசுந்தரி பெரும் பொருட்ச்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். இப்படத்தின் கதை, வசனத்தை இயக்குநர் செல்வபாரதி எழுத, திரைக்கதை அமைத்து ஷிவ்ராஜ் இயக்குகிறார்.
ஒரு சினிமா நடிகன் அரசியல்வாதியாக ஆகிய போது என்னென்ன நிகழ்வுகள் நடந்தன, நடக்கின்றன, நடக்கும் என்பதை அரசியல் நையாண்டியை சொல்லும் இப்படம் நகைச்சுவை கலந்த முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாகவும் உருவாகிறது.
தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் பிற தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...