கடந்த ஆண்டு வெளியான தெலுங்குத் திரைப்படமான ‘அர்ஜுன் ரெட்டி’ மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, தென்னிந்தியா முழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அப்படத்தின் ஹீரோ விஜய் தேவரகொண்டாவுக்கு ஏராளமானோர் ரசிகர்களாகிவிட்டார்கள்.
இதற்கிடையே, விஜய் தேவரகொண்டாவை ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தமிழுக்கு அழைத்து வந்திருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தை, ‘அரிமா நம்பி’, ‘இருமுகன்’ படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்குகிறார். இதில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக மெஹ்ரீன் பிர்ஸாதா நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், நாசர், எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
சாந்தா ரவி கே.சந்திரன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இவர் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரனின் வாரிசு என்பதும், இப்படத்தின் மூலம் இவர் தமிழில் அறிமுகமாகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சி எஸ் இசையமைக்க, கலை இயக்கத்தை கிரண் மேற்கொள்கிறார்.
இப்படத்தின் துவக்க விழா சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில், பிரபல தயாரிப்பாளர் கீதா ஆர்ட்ஸ் அல்லு அரவிந்த் கலந்துகொண்டு கிளாப் அடித்து படபிடிப்பைத் தொடங்கி வைத்தார். இதன் போது தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களான ஸ்வப்னா தத்து - வைஜெயந்தி மூவீஸ், கே எஸ் ராமாராவ் - கிரியேட்டீவ் கமர்சியல், பி வி என் பிரசாத் - எஸ் வி சி, நவீன் மற்றும் ரவி மைத்ரீ மூவிஸ், ஆகியோர்களுடன் தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநர்களான வம்சி, சந்தீப் ரெட்டி வங்கா, படத்தின் தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல்ராஜா, இயக்குநர் ஆனந்த் சங்கர், நாயகன் விஜய் தேவரகொண்டா, நாயகி மெஹ்ரீன் பிர்ஸாதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...