நட்சத்திரங்களைப் போல ரசிகர்களிடம் பிரபலமாக உள்ள தயாரிப்பாளர்களில் ஜே.சதீஷ்குமாரும் ஒருவர். தனது ஜே.எஸ்.கே பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக பல வெற்றிப் படங்களை தயாரித்ததோடு, பல விருது படங்களையும் தயாரித்து வருகிறது. தேசிய விருது என்றாலே ஜே.எஸ்.கே நிறுவனத்தின் படம் தான் என்று சொல்லும் அளவுக்கு இவர் தயாரிப்பில் வெளியான பல படங்கள் தேசிய விருதுகளை பெற்றுள்ளது.
இதற்கிடையே, இவரது தயாரிப்பில் சமீபத்தில் வெளியான ‘தரமணி’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றதோடு, ஊடகங்களின் பாராட்டு மழையிலும் நனைந்து வர, இப்படத்தை தயாரித்த ஜே.சதீஷ்குமார், தயாரிப்பாளராக பாராட்டு பெற்றுவருவதைக் காட்டிலும் நடிகராக பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறார்.
ஆம், ‘தரமணி’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ள ஜே.சதீஷ்குமார், பல படங்களில் நடித்த அனுபவமுள்ள நடிகரைப் போல அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருப்பதோடு, தனது நடிப்பால் அனைவரையும் மிரட்டியுள்ளார். மனைவியை சந்தேகப்படும் போலீஸ் அதிகாரி வேடம் தான் சதீஷ்குமாருக்கு. தனது வேடத்தை மிக சிறப்பாக செய்துள்ள அவருக்கு, வில்லன், குணச்சித்திர வேடம் எது கொடுத்தாலும் பொருத்தமாக இருக்கும், அந்த அளவுக்கு அவரது நடிப்பு கச்சிதமாக இருக்கிறது.
மொத்தத்தில், கோடம்பாக்கத்திற்கு புதிய வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் கிடைத்திருக்கிறார்.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...