காலா, 2.0 ஆகிய படங்கள் வெளியாக உள்ள நிலையில், ரஜினிகாந்த் தனது புதிய படத்தை அறிவித்ததோடு, அரசியல் பணியிலும் தீவிரம் காட்டி வருகிறார். இதற்கிடையே, ரஜினிகாந்திடம் பணம் பறிக்கும் நோக்கத்தில் அவர் நடித்த ‘கபாலி’ படம் மீது பொய்யான கூற்றச்சாட்டை சிலர் கூறி வருவதாக, அப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு கூறியுள்ளார்.
ஜி.பி.செல்வகுமார் என்பவர், கபாலி பட விநியோக உரிமை தருவதாகச் சொல்லி பணம் வாங்கிவிட்டு தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ஏமாற்றிவிட்டதாக திடீர் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்திருக்கும் தயாரிப்பாளர் தாணு, “ஜி.பி.செல்வகுமாருக்கும், கபாலி படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை செல்வகுமார் கபாலி படத்தை வாங்கவில்லை, விநியோகஸ்தர் வேணுகோபாலுக்கு சாட்சி கையழுத்து போட வந்தவர் தான் செல்வக்குமார் .அவர் அழைத்து வந்த வேணுகோபால் என்பவர் தான் வாங்கினார். அவருக்கும் எனக்குமான பணபரிவர்த்தனைகள் வெளிப்படையாகவும் ,நேர்மையாகவும் நடந்து வந்திருக்கின்றன. இது வரை, ரூ 61 லட்சம் அவருக்கு நேரடியாகவும், சேலம் பகுதியில் அவர் தியேட்டர் எடுத்த வகையில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் அவருக்கு நான் உதவியிருக்கின்றேன் என கலைப்புலி எஸ் தாணு அவர்கள் கூறியுள்ளார்.
கபாலி படம் நஷ்டம் என கூறுவது முற்றிலும் பொய். கபாலி மாபெரும் வெற்றி படம், சென்னையில் மட்டுமே 13 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது தயாரிப்பாளரே நானே சொல்கிறேன் படம் வணிகரீதியாக மாபெறும் வெற்றி பெற்றுள்ளது என பத்திரிகையாளர் சந்திப்பில் அவதூறுகளுக்கு பதிலளித்தார் கலைப்புலி எஸ் தாணு.
யாருக்காவது ஒரு கஷ்டம் என்றால் அவர்களை அழைத்து பிரச்னையை கேட்டு உதவி செய்வது சூப்பர்ஸ்டார் ரஜினியின் பழக்கம்,அதை பயன்படுத்தி ரஜினியை ஏமாற்றத்தான் தான் கபாலி நஷ்டமென்று சர்ச்சைகளை உருவாக்குகிறார்கள்..
தற்போது கபாலி படம் நஷ்டம் என்று பொய்களை கூறி ரஜினி சாரின் காலா படம் வெளியாகவிருப்பதை முன்னிட்டுத் தேவையில்லாத குழப்பத்தை ஏற்ப்படுத்துகிறார்கள். கடைசியில் நீதியே வெல்லும்.” என்று தெரிவித்துள்ளார்.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...