நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள். அதன்படி கிருஷ்ணகிரியைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்கத்தினர் சமீபத்தில் மாபெரும் நலத்திட உதவிகளை செய்துள்ளனர்.
15 பேருக்கு தையல் எந்திரம், 200 வேஷ்டிகள் மற்றும் 550 சேலைகள், 100 பேருக்கு சில்வர் குடங்கள், 50 பேருக்கு பள்ளி பேக்குகள், அரசு மருத்துவமனைக்கு 2 வீல் சேர், 10 சர்க்கரை சரிபார்க்கும் எந்திரங்கள், 100 பெட்சீட், 2000 பேருக்கு உணவு மற்றும் 20 பேருக்கு கல்வி உதவிதொகை ஆகியவை கிருஷ்ணகிரி விஜய் மக்கள் இயக்கத்தினரால் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நடைபெற்ற விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பி.பாலகிருஷ்ணா ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் புஸ்ஸி என்.ஆனந்த் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்ட தலைவர்கள் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்துக் கொண்டார்கள்.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...