தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றும் பலர் வெள்ளித்திரையில் நுழைந்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் பலர் ஹீரோவாகவும் வெற்றி பெற்று வரும் நிலையில், தற்போது இந்த பட்டியலில் புதிதாக இணைந்திருக்கிறார் பிரபல விஜே ரக்ஷன்.
பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருக்கும் ரக்ஷன், துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் ஒரு சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தனது முதல் திரைப்படம் அனுபவம் குறித்து கூறிய ரக்ஷன், “நடிப்பில் சாதிக்க வேண்டும் என்பது என்றுமே எனது கனவாகும். ஒரு நல்ல வாய்ப்புக்காக காத்திருந்த வேலையில் தான் எனக்கு ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தா’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இது போன்ற ஒரு மிகச்சிறப்பான கதையிலும், கதாபாத்திரத்திலும் நான் நடிப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த படத்தில் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரம் நகைச்சுவை கலந்த சுவாரஸ்யமான கதாபாத்திரமாகும். இந்த வாய்ப்பை எனக்கு தந்த இயக்குநர் தேசிங் பெரியசாமிக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிரேன். மிக பெரிய நட்சத்திரமாகவும் ஒரு ஸ்டாரின் மகனாகவும் இருந்தாலும் துளிகூட பந்தாவே இல்லாமல் மிக எளிமையாக பழக்ககூடியவர் துல்கர் சல்மான். ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு விருந்தாக இருக்கும் என நம்புகிறேன்.” என்றார்.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...